India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ரயில்வே போலீசாருக்கு, பைகாரா பகுதியை சேர்ந்த விஏஓ பெயரில் கடிதம் வந்தது. அதில், பைகாரா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், கடித முகவரியை தொடர்பு கொண்ட போது அதில் பேசியவர், தான் விஏஓ ஆக இருப்பதாகவும், முன்விரோதத்தில் தன்னுடைய பெயரில், யாரோ கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 27 இல் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும்” தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் பி. சுப்பிரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் ஆழ்வார்புரம் பகுதியில் இரு இளைஞர்கள் மீது 5பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருப்பாச்சியை சேர்ந்த 26 வயது வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு 8வது பிளாட்பார்ம் அருகே அடையாளம் தெரியாத யாசகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக அந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ‘இந்துக்களின்
சொத்துகளை காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கொடுத்து விடும்’ எனக் கூறினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் வகையில் “Rest in Peace” இந்திய தேர்தல் ஆணையம்” என்று அமைச்சர் பிடிஆர் தன் X பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
மதுரை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் மீது ரசாயன பொடி, பால், தயிர் கலந்த தண்ணீரை பீச்சியடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இன்று நடந்த சித்திரை திருவிழா ஏற்பாடு குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள விழா ஏற்பாடு திருப்தி அளிப்பதாக பாராட்டியுள்ள நீதிமன்றம் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் இடத்தில் 2,500 பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.
“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <
மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 104.36 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவானது. இதனால் பிற்பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைந்த அளவே காணப்பட்டது. இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இதேபோல் வெப்பநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.