India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி ஊர்காவல் படைக்கு (மார்ச்.19) அன்று ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மதுரை மாநகர் ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆள்சேர்ப்பு தேதி பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அறிவிக்கப்படும் என ஆணையர் லோகநாதன் அறிவித்துள்ளார்.
சிவகங்கை சேர்ந்த 16வயது சிறுமியிடம் 2 ஆண்டுக்கு முன் வாடிப்பட்டியை சேர்ந்த வினோத் 20, காதலிப்பதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து வினோத்-ன் உறவினரான கௌதம் 31, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி கர்ப்பமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இருவர் மீது இன்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரம் தொடர்ந்து செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 1800 425 5799 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 0452 2535374, 2535375, 2535376, 2535377, 2535378 தொலைபேசி எண்களையும் அழைக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு
மதுரையில் பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி கலந்துகொண்டு தேர்தல் பணியின் போது உள்ள சவால்கள் குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர் அழகுமீனா. இவரது தம்பி முனிவேல் அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகளை காதலித்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முருகன் வீட்டார் நேற்று அழகுமீனாவின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டனர். அப்போது, முருகனின் மனைவி புவனேஷ்வரி கையில் வைத்திருந்த அரிவாளால் அழகுமீனாவை வெட்டியுள்ளார். காயமடைந்த அழகுமீனா அளித்த புகாரில் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என கடந்த 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த நிலையில் முதல்வர் படம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்று நாட்களாகியும் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல்வர் படம் மற்றும் அரசின் சாதனை விளக்க பதாகைகள் இதுவரை அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மதுரை மாவட்டத்திலேயே 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனித்துவம் பெற்றுள்ளது. 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும், 6 ஊராட்சிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றிய மக்கள் இரு எம்பி-க்களை தேர்வு செய்ய உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.