Madurai

News March 20, 2024

மேலூர்: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

image

மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். குடும்ப சூழல் காரணமாக கடந்த 8மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 2 வாரத்திற்கு முன் வீரதேவன் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர ஆட்சியருக்கு அவரது மனைவி லட்சுமி  கோரிக்கை விடுத்துள்ளார். 

News March 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் மார்ச். 25, 26 ஆகிய 2 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று வலியுறுத்தியுள்ளார்.

News March 20, 2024

ஊடக சான்றளிப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி பெற வேண்டிய ஒற்றைச் சாளர முறை (SINGLE WINDOW SYSTEM ) அறையை இன்று (20.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா பார்வையிட்டார். இதேபோல் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

News March 20, 2024

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, மதுரை தொகுதியின் வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

கோடை கால யோகா பயிற்சி

image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ‘மன அமைதி, முழுமையான ஆரோக்கியம்’ எனும் தலைப்பில் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இரண்டு மாதம் கோடைகால யோகா பயிற்சி நடைபெற உள்ளது என காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தா ராவ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர விரும்புவோா் 99941-23091 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.

News March 20, 2024

இன்று வேட்பு மனுதாக்கல்: அதிகாரிகள் தயார்

image

மதுரை: மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச்.20) துவங்குவதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா உள்ளார். மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். இதற்கான தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <>கிளிக்<<>> செய்யவும்.

News March 20, 2024

எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி மன்ற பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தாதம்பட்டி, ஒட்டான் குளக்கரையில் உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அறைகள் நேற்று மாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News March 19, 2024

டெல்லியில் விருது பெற்ற மதுரை போக்குவரத்து கழகம்

image

சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் அனுராக் ஜெயினிடமிருந்து விருதினை பெற்றார்.

News March 19, 2024

ஏப்.8ல் கொட்டகை முகூர்த்த விழா!

image

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி காலை 9:00க்கு மேல் 9:45 மணிக்குள் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா, ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் வண்டியூர் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!