India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு 3 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளலூர் நாடு அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் உள்ளூர்டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை நியோமேக்ஸ் என்ற மோசடி நிதி நிறுவனத்தின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நிதிநிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றை சாராள முறையை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருளை அலைபேசியில் அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைச்சர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் பாமகவினர் கூறியுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தல், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோழவந்தான், உசிலம்பட்டி ஆகியவை தேனி மக்களவைத் தொகுதி.
சித்திரை திருவிழாவில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் போது, வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரை அதிக விசையுள்ள குழாய்கள் மூலம் பீய்ச்சுவதற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று மதுரை மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான செல்லூர் கே.ராஜூ மற்றும் R.B.உதயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் வேட்பாளர் சரவணன் வாழ்த்தியதுடன் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்வது குறித்து உறுதி அளித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி வருகிற 28ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அன்று அதிகாலை மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சென்று திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளுகிறார். இதனால் நடை திறக்கப்படாது என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோழவந்தான் தொகுதியில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவின் பணிகளை நேற்று வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி, வாகன தணிக்கை பணியை பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.