India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உள்ள 10 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகின்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என மதுரை பழம் உற்பத்தியாளர் சங்க தலைவர் திருமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சுங்கச்சாவடி கட்டண உயர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு வியாபாரிகள் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மதுரையில் முனைவர் மோ.சத்யாதேவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பு, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் 19 , ஸ்ரீதர் 20 ஆகிய இரு நண்பர்கள் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செக்கானூரணி அருகே அழகுசிறையில் வைத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை கூடல்நகர் பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவி நேற்று முன் தினம் மாலை வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், சிறுமி மரணம் இயற்கையானதா? சிறுமி கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா ? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், மற்றும் நிர்வாகிகள் பாண்டியன், முகில் ஆகிய 6 பேரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை தலைமை அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய தொண்டர்கள் சுழன்று வேலை பார்ப்பார்கள் என்றார்.
+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
சைவ பிரியர்களுக்கு விட்டமின் ஏ, டி பற்றாக்குறையை நீக்க குறுந்தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பால் உதவுகிறது என மதுரையில் நேற்று நடந்த பயிலரங்கில் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார். அப்போது, “விட்டமின் பி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் அதிகமுள்ள இந்த பாலில் அலர்ஜியை ஏற்படுத்தும் குளூட்டான் மற்றும் லாக்டோஸ், கொழுப்புச்சத்து இல்லாததால் -இது விலங்குகளிடமிருந்து பெறும் பாலை விட சிறந்தது” என்றார்.
போடி- மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப்பாதையை மிக கவனமாக, கடந்து செல்ல தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.