India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி கலந்துகொண்டு தேர்தல் பணியின் போது உள்ள சவால்கள் குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர் அழகுமீனா. இவரது தம்பி முனிவேல் அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகளை காதலித்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முருகன் வீட்டார் நேற்று அழகுமீனாவின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டனர். அப்போது, முருகனின் மனைவி புவனேஷ்வரி கையில் வைத்திருந்த அரிவாளால் அழகுமீனாவை வெட்டியுள்ளார். காயமடைந்த அழகுமீனா அளித்த புகாரில் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என கடந்த 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த நிலையில் முதல்வர் படம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்று நாட்களாகியும் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல்வர் படம் மற்றும் அரசின் சாதனை விளக்க பதாகைகள் இதுவரை அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மதுரை மாவட்டத்திலேயே 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனித்துவம் பெற்றுள்ளது. 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும், 6 ஊராட்சிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றிய மக்கள் இரு எம்பி-க்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை
நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு மண்டலத்திற்குபட்ட சுடலை முத்து பிள்ளை தெரு ஶ்ரீ நாகர்சாமி கோவிலில் இன்று 54ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாரத நாட்டியமாடி அசத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா நாட்டியமாடிய மாணவிகளை பாராட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் சி – விஜில் மற்றும் சுவிதா ஆகிய மொபைல் ஆப்கள் மூலம் போட்டோ, வீடியோவுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் 1800-425-5799, 0452 2535374, 0452 2535375, 0452 2535376, 0452 2535377, மற்றும் 0452 2535378 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க மதுரை மாவட்ட காவல்துறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண்ணை (9498101395) தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.