Madurai

News May 2, 2024

விளையாட்டு விடுதிகளில் சேர அழைப்பு

image

மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான தேர்வில் மாணவர்கள் 10 ஆம் தேதியும், மாணவிகள் 11 ஆம் தேதியும் காலை 6.00 மணியளவில் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 9514000777 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

விடுமுறை அளிக்காத 114 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தொழிலாளா் தினமான மே 1 அன்று அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி மதுரையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம் 1961 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

இலவச கிரிக்கெட் பயிற்சி

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரையில் 14 வயது, 16 மற்றும் 19 வயது நிரம்பிய ஆண்களுக்கு, இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிரிக்கெட் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோவை 96777 95400ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா

image

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் கூறுகையில், ”உடல் நிலை பாதிப்பு சூழல் கருதி ராஜினாமா செய்ய திட்டமிட்டு, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். வேறு காரணம் எதுவுமில்லை. உடல் நலம் பாதிப்பு காரணமாகவே விலகி கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஆளுநரின் தகவலுக்காக காத்திருக்கிறேன்” என்றார். இன்னும் அவருக்கு 11 மாதம் பணிக்காலம் இருப்பது, குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

மேலூர் : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

image

மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ள குழிச்சேவல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி அனிதா தம்பதியரின் மூன்றரை வயது குழந்தை தர்ஷன். இக்குழந்தை இன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்தது. சிறிது நேரம் கழித்த தாய் குழந்தை தேடிய போது குழந்தை தொட்டி நீரில் விழுந்து பலியானது தெரிந்தது.

News May 1, 2024

மதுரை மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மயக்கம் அல்லது அசெளகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இலவச ஆம்புலன்ஸ் எண் 108க்கு அழைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவசரகால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077, மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News May 1, 2024

மதுரையை குளிர்விக்கும் மாநகராட்சி

image

கடந்த சில நாட்களாக, மதிய வேளையில், மதுரை மாநகரம் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலையை எட்டி வருகிறது.அதனால், மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு, தினமும் பகல் வேளையில், நகரின் முக்கிய சாலைகளில் லாரி தண்ணீரை ஊற்றி வருகிறது.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News May 1, 2024

மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு ஜூன் 2 வரை கோடை விடுமுறை

image

மதுரை உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று (மே 1) முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை ஆகும்.
விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News May 1, 2024

மதுரையில் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

image

கோடைகாலத்தில் மதுரையில் சீரான முறையில் குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மோகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு மற்றும் குடிநீர் வழங்கும் பகுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்திய ஆனந்த் மோகன் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News May 1, 2024

மதுரை : லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

image

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், (32). இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன்(47), ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகியபோது 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுரையின்படி நேற்று இருவரிடமும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியபோது இருவரையும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தது.

error: Content is protected !!