India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நேற்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை, அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் டாக ( 42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. கடந்த 2019ம் ஆண்டு மே 29ந் தேதி மதுரையில் 42 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பேஸ்புக் நட்பில் இருந்தவர் வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரிய மனு மீதான நேற்றைய விசாரணையில், குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பித்த 490 மாணவ, மாணவிகளுக்கு ஒத்தக்கடை மாதிரிப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். ஆகிய பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மாா்ச் 27ல் தொடங்கி தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள், தோ்வுகள் நடைபெற்றன. மேலும், திருப்புதல் மற்றும் வாராந்திரத் தோ்வுகளும் நடைபெற்றன.நேற்று (மே 2) பயிற்சி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (ம) வெப்பத்தினை பொதுமக்கள் எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை
வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்திற்கு 2024-2025ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பொதுச்செயலாளராக சரவணக்குமார், துணைத் தலைவராக டி. சி. பி. சக்கரவர்த்தி, பொருளாளராக பி. சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(44). நேற்றிரவு இவரது மனைவி ராஜம்மாளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கதவைத் தட்டி வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் கணவன் மனைவியை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். மர்ம நபர்கள் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2956 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 2652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கல்குவாரிகளில் வெடிமருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான தேர்வில் மாணவர்கள் 10 ஆம் தேதியும், மாணவிகள் 11 ஆம் தேதியும் காலை 6.00 மணியளவில் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 9514000777 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.