India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ம் தேதி 2 பேரும், 22-ம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதனையடுத்து 25-ம் தேதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக உள்பட 11 பேர் மனு தாக்கல் செய்தனா். 26ம் தேதி 6 பேரும், இறுதி நாளான நேற்று 13 பேரும் மனுதாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 33 ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் 41 ஆகவும் உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள், கிரிவல பாதை மற்றும் தி.குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் வாகனங்கள் அனைத்தும் GST சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரே காரணம் என விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபகாரன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் பாஜக கண்டுக்கொள்ளாது. பொது வேட்பாளராக நான் வென்ற பின், அதை எப்படி வாங்குவது என்று எங்களுக்கு தெரியும் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி, நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜுவதின். இவர் நாகர்கோவிலிலிருந்து தேனி செல்வதற்காக விருதுநகர் – திருமங்கலம் 4 வழிச்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆவல்சூரம்பட்டி விலக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து. இவ்விபத்தில் ஜுவதின், கஸ்தூரி திலகம் என்பவர்கள் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட பொதுத்தேர்வினை 488 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 389 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுகளுக்காக மாவட்டம் முழுவதும் 145 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று 37 ஆயிரத்து 613 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 776 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
மதுரை, அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜியை நீக்கம் செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவி முறைகேடு செய்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி பதவி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மீண்டும் அவருக்கு பதிவு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் துவக்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3மணியுடன் வேட்புமனு நிறைவடைகிறது. மதுரை தொகுதியில் போட்டியிட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே அதிமுகவின் இலக்கு என முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் “மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை” எனவும் பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை ரத்துசெய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடை முறைப்படுத்த வலியுறுத்தி மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். சகோதரிகளான இருவரும் பலவேறு சமூகப் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.