India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிறப்பு திருப்பலியில் வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்களது செலவீன கணக்குகளை சமர்ப்பித்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராணி லாமா, மதுமிதா தாஸ் முன்னிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு பரிசீலனை முடிவில் 21 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டு இன்று மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று யாருமே வேட்புமனுவை வாபஸ் பெறாததால் அதே 21 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, சாணார்பட்டி, கட்டக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விரலை துண்டாக வெட்டினாலும் இரட்டை இலையை தவிர வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் இந்த தொகுதி மக்கள் என நம்பிக்கை தெரிவித்து பேசினார்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது சகோதரியான பிரியா குடும்பத்துடன் அருகில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று செல்வம் வளர்க்கும் நாய் பிரியாவின் வீட்டிற்குள் சென்றதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், இது குறித்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில், மதுரை நாம் தமிழர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனைவர் மோ. சத்யாதேவியை ஆதரித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பரப்புரை மேற்கொள்கிறார்.
மதுரை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் கரூர் பரமத்தி, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது. மேலும், திருச்சி, வேலூர், திருத்தணி, மதுரை நகர், மதுரை விமான நிலைய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக திருமணம் பத்திரிகை அடிப்பது போல் பத்திரிகை அடித்து பொதுமக்களை வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் பத்திரிகையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மக்களவை தேர்தல் திருவிழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் வருகை தந்து தவறாமல் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பிரிவு செயலாளராக, மதுரையைச் சேர்ந்த இளைஞர் எம். ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நீச்சல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர், சிறுமியர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக (உயரம் 125 செமீ மேல்) இருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி வகுப்பு தொடர்பாக நீச்சல்குளத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.