India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டதாவது, மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்’
என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி, ஏப்ரல்.4ஆம் தேதி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் திருக்கல்யாண விழா ஏப்ரல்.21 நடைபெற உள்ளது. இதனையடுத்து, நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நேரடியாக கோவில் நிர்வாகத்திடம் வழங்க கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் இத்திட்டத்தின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது. திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கோரிப்பாளையம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்றம் வழியாக ஒத்தக்கடை வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை பொதிகை நகர் பகுதியில் கடந்த வாரம் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை வளர்த்து வந்த அவரது பெரியப்பா ராணுவ வீரர் செந்தில்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அவரது மனைவி சந்திரா கொலையை மறைக்க துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சு.வெங்கடேசன் இன்று மாவட்ட தேர்தல் நடத்து அலுவலர் சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கேகே நகர் எம்ஜிஆர் சிலையிலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசியர் ராம சீனிவாசன், பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிக அளவிலான கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 5பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.