Madurai

News March 16, 2024

அரசியல் கட்சி விளம்பரங்கள் அதிரடியாக அகற்றம்

image

நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.

News March 16, 2024

தேர்தல் குறித்த அவசர ஆலோசனை

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

News March 16, 2024

மதுரை: 322 வாகனங்களுக்கு அபராதம்

image

மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.

News March 16, 2024

மதுரை: ஊர்காவல் படையில் சேர அழைப்பு

image

மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி, ஊர்காவல்படைக்கு வரும் 20ம் தேதி அன்று ஆள் சேர்ப்பு முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. விருப்பமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் வரும் 18, 19ம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

மதுரை மக்களே இது கடைசி வாய்ப்பு

image

மதுரை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், குழந்தை பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அக்குழந்தையின் பிறந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு 15 ஆண்டு முடிந்ததும் பதிவு செய்யாதவர்கள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கான வாய்ப்பு 2024 டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!