India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒத்தக்கடை அருகே உறங்கான்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டி(41). இவரது மனைவி சத்தியா. செல்லபாண்டி மனைவியை பிரிந்து வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்லபாண்டி அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது 17 வயது மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவில் தந்தையை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு மையத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா மின்னல் தாக்கியதால் ஒரு சில கேமராக்கள் இயங்காமல் பழுதானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆட்சியர் சங்கீதா தற்போது அனைத்து கேமராக்களும் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இன்று (08.05.2024) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 39 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வினை (செட்) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கணினி வழியாக ஆன்லைனில் வருகிற ஜூன் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் (ஞாயிறு தவிர) மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மதுரை, காக்காதோப்பு மூட்டா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை பெண் அதிகாரிகள் குறித்து ஆதரவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து காவல்துறை வாகனத்தில் சென்ற சவுக்கு சங்கர் மீது அங்கு கூடியிருந்த மகளிர் அமைப்பினர் துடைப்பத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் கருவி செயல்படாததால், ஒரு வாகன ஓட்டியிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்த குற்றத்துக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகத்துக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் இன்று ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. அமெரிக்கன் கல்லூரி துணை தலைவர் மார்ட்டின் டேவிட், 2020ஆம் ஆண்டு சுங்கச்சாவடியை கடந்த போது அவர் மோசமாக நடத்தப்பட்டது குறித்து தீர்ப்பு அளித்துள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4.ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை பெத்தானியாபுரம் அருகே உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாயில் இன்று பெண் சிசு சடலமாக கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த கரிமேடு போலீசார் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு சிசுவை வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, ஒத்தக்கடை பகுதியில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது. அப்போது, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.