India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஜாவா, 3 டி ‘அனிமேஷன் அண்ட் ஸ்பெஷல் எபக்ட்ஸ் ‘ குறித்த பயிற்சி ஜூனில் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு குறைந்த கட்டணம். முன்பதிவுக்கு: 86956 46417 அழைக்கவும்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் மதுரைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் உசிலம்பட்டி அருகே தி.விளக்கு என்கின்ற இடத்தில் எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனமும் ஆம்புலன்ஸும் நொறுங்கியது. இதில் இரு ஓட்டுநர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள், மதுரை தபால்தந்தி நகர், பாா்க்டவுன் சங்கரபாண்டியன் நகரில் உள்ள மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை புகாா் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் நேற்றைய மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சாத்தையாறு பகுதியில் 5 செ.மீட்டரும், பேரையூரில் 3 செ.மீட்டரும், மேட்டுப்பட்டியில் 2 செ.மீட்டரும், மதுரை வடக்கு மற்றும் நகரம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப் பதிவானது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக 2023-24 ம் ஆண்டிற்கான ‘காய கல்ப் ‘ ஆய்வில் மாநில அளவில் மேலூர் தாலுகா அரசு மருத்துவமனை 100க்கு 94.71 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. கடந்த வருடம் மேலூர் 3வது இடத்தில் இருந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை 2ம் பிடித்தது. இந்த வெற்றியால் மேலூர் தலைமை மருத்துவர் ஜெயந்திக்கு இதனால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் மதுரையில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் ஜூன் 04. ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், தனது பிறந்த நாளாக ஜூன்22.ஆம் தேதியை முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாக கட்சியின் மாநாட்டை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில், வார்டு எண்கள் வரிசைப்படி இல்லாததுடன், வெவ்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு ஒரே எண் இருந்ததும் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எண்களை மாற்றி அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட எண்களை வார்டுகளில் எழுதும் பணி தொடங்கி நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சியில் வீடுகளில் நாய்களை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது சென்னையில் நாய்கள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காந்தி மியூசிய வளாகத்தில் உலக மியூசிய தினத்தை முன்னிட்டு வரும் மே.11 முதல் 16 வரை சிறியவர், பெரியவர்களுக்கு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக காப்பாட்சியர் மருதுபாண்டியன் நேற்று அறிவித்துள்ளார். மே.11 இல் பல்லாங்குழி, 12 இல் தட்டாங்கல், 13 இல் தாயம், 14 இல் நொண்டி, 15 இல் கிட்டிப்புல், 16 இல் கோலிக்குண்டு போட்டிகள் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் 97900 33307 முன்பதிவு செய்யலாம்.
மதுரையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் மதுரை வைகை ஆற்று வடகரை பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தாழ்வான நிலையில் உள்ள சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.
Sorry, no posts matched your criteria.