India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பயிலும் புவனா என்ற மாணவி ஏப்ரல் 6 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள விமான பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வாகியுள்ள கல்லூரி மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தி சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் இடையபட்டியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை நோக்கி வந்த சொகுசு காரை பரிசோதனை செய்தபோது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 23 லட்சத்து 9 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை மதுரை கோட்டாட்சியர் ஷாலினி உத்தரவுப்படி வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக கட்சியின் தலைவர் பொன். முருகேசன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் பாதுகாப்பு தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளாமே என அறிவுறுத்தியது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதில், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக மதுரையில் தான் 511 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் இன்று (04.04.2024) திருக்கோவிலின் துணை ஆணையர் செயல் அலுவலர் கலைவாணன், மதுரை உதவி ஆணையர் து.வளர்மதி, தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை பணி நடைபெற்றது. இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ.26,22,682 ரொக்கமும், 27 கிராம் தங்கம் மற்றும் 190 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.
மதுரை மோசடி நிதி நிறுவனம் நியோமேக்ஸ், நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பாக, மோசடி குறித்து விரைவாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டது.
மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வாகன ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் டூவீலர்களில் பங்கேற்றனர்.ஊர்வலம் மேலுார் ரோடு, மாநகராட்சி அலுவலகம்,தல்லாகுளம் வழியாக தமுக்கத்தை அடைந்தது.கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா,மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்
மதுரை மக்களவை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார்கள். யார் கேள்வி கேட்டாலும் அவர்களை நக்சல் என்கிறார்கள். மீறி கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை ரெய்டு செய்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என அவர் கூறினார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.