India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் 6 செ.மீட்டரும், மேட்டுப்பட்டி,கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 4 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, பெரியபட்டி, திருமங்கலம்,கல்லிக்குடி, சித்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மதுரை மாவட்ட பள்ளிகளின் வாகனங்கள் நிலை குறித்து, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 280 பள்ளிகளைச் சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் வசதி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனிடையே தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டு செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைவாசிகள் 51 பேர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 99% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் வசிப்பவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஷர்மிளா வழக்கம் போல் பணிக்குச் சென்றுவிட்டு இன்று காலை வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 250 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை அருகே ராம்கோ நகரில், நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக அறிந்த எஸ் ஐ சுதன் அங்கு சென்றார். பணம் வைத்து சேவல் சண்டை, சூதாட்டம் நடத்திய ஜெயக்குமார், பாலமுருகன், பிரபாகரன், தில்சன், பன்னீர்செல்வம், கார்த்திக், தங்கவேலு, பாண்டி, என 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 7 டூவீலர்கள், சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை மாவட்டத்தில் 35, 426 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனர். 488 பள்ளிகளில் பயின்ற 37,660 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினர். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மாவட்டத்தில் 17,301 மாணவா்கள், 18,125 மாணவிகள் என மொத்தம் 35,426 போ் தோ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் வருகிற 14ம் தேதி ரஷ்ய கல்விக் கண்காட்சி தனியார் விடுதியில் நடைபெறும் என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கண்காட்சியில், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், கல்விக் கட்டணம், தங்குமிட வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘ நீட்’ தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே மதுரை வழியாக செல்லும் புதிய சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
” தாம்பரம்- திருவனந்தபுரம் கொச்சுவேளி – தாம்பரம் சிறப்பு ரயில் ” வியாழன் மற்றும் சனிக்கிழமை சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பி, விழுப்புரம், திருச்சி,மதுரை, விருதுநகர் வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும். இன்று 11/05/24 காலை முதல், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.