Madurai

News April 7, 2024

மதுரை: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

போலி ஹால்மார்க் நகைகள் அதிரடியாக பறிமுதல்

image

மதுரை மண்டல தரநிர்ணய ஆணைய அறிவியல் ஆய்வு இணை இயக்குநர்கள் அறிவழகன் தலைமையிலான அலுவலர்கள் போலி ஹால்மார்க் நகைகள் குறித்து நேற்று மதுரை, தேனியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தேனி பகவதியம்மன் கோயில் தெருவிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ 880 கிராம் தங்க நகைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

News April 6, 2024

மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போது கோடைகாலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அதிக ஆழம் கொண்ட நீர் நிரம்பியுள்ள பகுதிகளான ஏரிகள், ஆறுகள், குட்டைகள் மற்றும் கிணறுகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி சிறார்களை பெற்றோர் கண்காணிக்க தவற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 6, 2024

சித்திரை திருவிழா-ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின் போது பாரம்பரிய முறைப்படி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் முன்பதிவு செய்வது கட்டாயம். என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 6, 2024

மதுரையில் 40 டிகிரியை தொட்டது வெயில்

image

மதுரையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 6, 2024

சித்திரை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்

image

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி அர்விந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் சார்ந்த ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News April 6, 2024

கலவரத்தை உருவாக்க நினைக்கிறார் டிடிவி

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “நாங்கள் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறோமோ அங்கெல்லாம் அனுமதியின்றி டிடிவி தினகரன் வருகிறார். ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

News April 6, 2024

மதுரை: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

மதுரை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு

image

கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்ச நாளை (ஏப்.06) முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்சவும், நேர்த்திக் கடன் செலுத்தவும் கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், உயரழுத்த பிரஷர் பம்ப், மின்னழுத்த மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

குப்பை லாரி மோதி இளைஞர் பலி

image

மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவர் நேற்று அரசரடி டி.பி. சாலையில் பைக்கில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த குப்பை லாரி மீது மோதி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!