India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சித்திரை திருவிழாவின் மீனாட்சி திருக்கல்யாண விழா வரும் ஏப்.21ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ. 200, ரூ.500க்காண கட்டணச்சீட்டு நாளை முதல் ஏப்.13ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம்
மதுரையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரையில் சில நாட்காகவே 103 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மேலும், வெப்பசலனம் காரணமாக அடுத்த 6 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமங்கலம் கக்கன் காலனி ஓடை அருகே ஒரு பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கடந்தது. விசாரணையில் அவர் சுந்தர்(38) கடந்த 8 ஆண்டுகளுக்காக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாஜகவில் தலைவர் பஞ்சம் ஏற்பட்டதால் ரெடிமேடாக அண்ணாமலை தலைவராக நியமிக்கட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்லும் மற்ற கட்சிகள் அனைத்தும் இரும்பு கடைக்கே செல்லும் என அண்ணாமலை கூறிய கருத்திற்கு இன்று ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவலா்கள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தலைவா் போஸ், பொதுச்செயலா் குமரவேல், பொருளாளா் ராஜா சந்திரசேகா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு, வருகிற 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு ஊதியம் வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது
நாகமலை புதுக்கோட்டை அருகே மேலக்குயில்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் அருகில் தேநீர் கடை நடத்தி வரும் சுந்தரபாண்டிக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது ஈஸ்வரியின் மகன் தெய்வேந்திரன் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியின் மனைவி பவானி கொதிக்கும் தேநீரை தெய்வேந்திரன் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது 21) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு தான் காதலிப்பதாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார். இதை அந்த பெண்ணின் தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது சதீஷ் அந்த பெண்ணை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று பெண்ணின் தந்தை அளித்த புகாரில் சதீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரையில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 875 மூத்த குடிமக்கள், 324 மாற்றுத் திறனாளிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று முதல் அவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி துவங்கப்பட்டது. இன்று 2வது நாளாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடக்கும் நிலையில், மேலும் நாளையே கடைசிநாள் என்பதால் வாக்களிக்காத முதியோர் தபால் வாக்களிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இளைஞர் ஒருவரிடம் மாணவி போனில் பேசி வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் செயினுடன் திடீரென மாயமானார். இதையடுத்து நகையுடன் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தர தந்தை புகார் அளித்துள்ளார்.
மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.