Madurai

News April 11, 2024

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரைக்கு வருகை தருகிறார். பிற்பகலில் வரும் அவர் இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

News April 11, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவை தோ்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்.,19 அன்று மதுரை மாவட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மீது 98652 22938, 82484 63905, 99410 12190, 78713 87668, 99445 17244 மற்றும் 0452 2530729 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ நடக்கும் பகுதி.

image

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மதியம் மதுரை வரும் நிலையில், மாலையில் மதுரை-திண்டுக்கல் ரோடு முருகன் கோவிலிருந்து தொடங்கி ஜான்சிராணி பூங்கா, தெற்காவணி மூலவீதி , வழியாக விளக்கு தூண் வரை நடைபெறவுள்ள ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
அமித்ஷாவின் ரோட் ஷோவை முன்னிட்டு போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

News April 11, 2024

மோடி, அமித்ஷா மீது காவல் நிலையத்தில் புகார்

image

மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு ஒன்றை இன்று அளித்தார். அம்மனுவில் பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் தேர்தல் பத்திர நிதி வசூல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 11, 2024

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

image

மதுரை வடக்குவாசல் ஜஹாங்கீர் என்பவர் மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை கைது செய்த மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜஹாங்கீருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

News April 11, 2024

புகழ்பெற்ற கல்மண்டபத்தில் சடலம் மீட்பு

image

மதுரை கூடலழகர் கோவில் எதிரே பழமை வாய்ந்த கல் மண்டபம் உள்ளது. இந்த கல் மண்டபத்தில் நேற்று காலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி அங்கு வந்த திடீர் நகர் போலீசார், உடலை மீட்டு இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2024

பிரச்சாரத்தில் வீதியுலா வந்த கள்ளழகர்!

image

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று மாநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் சரவணனுக்கு கள்ளழகர் ஆதரவு அளிக்கும் வகையில் கள்ளழகர் வீதியுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேட்பாளர் வந்தபோது கள்ளழகர் கூட்டத்தில் திடீரென மக்கள் முன்னிலையில் எழுந்தருளிய நிகழ்வு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகமூட்டும் வகையில் அமைந்தது.

News April 10, 2024

மதுரை: விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

image

விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை அருகே இன்று முன்னால் சென்ற பைக் மீது கார் மோதி சாலை ஓரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஓட்டுநர் மணியின் மகள் சிவஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

News April 10, 2024

தேசிய தடகள போட்டியில் 3 தங்கம் வென்ற  மாணவர்

image

மேலூர் அருகே வெள்ளரிபட்டியைச் சேர்ந்த யோக சஞ்சய்(23) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கிறார். இவர் டெல்லியில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில்
10 கிமீ மற்றும் 5 கிமீ தனிநபர் ஓட்டம், தொடர் ஓட்டம் என 3 தங்க பதக்கங்களை வென்றார். இந்த வெற்றியால் நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார். இன்று ஊர் திரும்பிய இவரை வெள்ளரிப்பட்டி கிராம பொதுமக்கள் வரவேற்றனர்.

News April 10, 2024

வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்

image

இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, ஓய்வு பெற்ற வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் பொன்னுச்சாமி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விவசாயத்தை நீர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைத்து லாபகரமாக்கி வெற்றி கண்ட வேப்பங்குளம் மாடலை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

error: Content is protected !!