India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மட்டும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “மீண்டும் மோடி வேண்டும் மோடி, ஏப்ரல் 12 மீண்டும் தமிழகம் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” எனக் குறிப்பிட்டு அமித்ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சந்தான பாரதிக்கும் , அமித்ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் பரப்புரைக்காக இன்று மதுரை வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பார்வையாளர்கள் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் அவசர கால நிலைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் வழிப்பறி வழக்குத் தொடா்பாக மதிச்சியம் போலீஸாரால் கடந்த ஏப். 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஏப். 5-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், காா்த்திக் உடலில் காயங்கள் இருப்பது உடல் கூராய்வு அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம், அதை சுற்றி உள்ள பகுதியில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து மேளதாளம் மற்றும் சிவச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்ற விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர், உறவினரான மணி என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மணி, அவரது மகன் தினேஷுடன் சேர்ந்து நேற்று கார்த்திகை கத்தியால் குத்தி கொலை செய்தார். தொடர்ந்து உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த தந்தை மற்றும் மகனை போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
மதுரை அருகே சமயநல்லூர் தேனூர் ரெயில்வே கேட் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. தொடர்ந்து, அவர் யார்? ரயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தண்டவாள பாதையை கடக்க முயன்ற போது பலியானாரா ? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொள்ளும் வாகனப் பேரணி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலின் கோபுரங்களில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்து நிற்கும் ரம்மியமான காட்சிகள் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.