India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரைக்கு தினமும் ரயில்கள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
டூவீலரில் வரும் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷனில் 3 டூவீலர் பார்க்கிங் கட்டப்பட்டு வருகிறது. கிழக்கு நுழைவாயிலில் 3 மேல் தளங்களுடன் 2929 ச.மீ., அளவில் தரைத்தளம் முதல் 4 அடுக்குகளாக அமைக்கப்பட உள்ளது. மேற்கு நுழைவாயிலில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களுடன் 2580 ச.மீ., அளவில் பார்க்கிங் கட்டப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விரகனூர் அணை பகுதியில் 3 சென்டி மீட்டரும், சித்தம்பட்டியில் 1 சென்டி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம், மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் சார்பில் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் மே 25 முதல் 29 வரை பனை ஓலை ஓவிய கண்காட்சி மற்றும் ஓவியம் வரைவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. பாரம்பரிய பனைஓலை வடிவமைப்பு கலையை மீட்கும் வகையில் நடைபெறும் இலவச பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதியில்
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகை வைப்பவர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி அனுமதி பெற்று அனுமதி கொடுத்த இடத்தில் மட்டுமே பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் எனவும் தனிச்சையான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை பண்பாட்டு பயிற்சி முகாம் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் வரும் மே 24 முதல் 26 வரை நடக்கவுள்ளது. இதில், வேத கணிதம், பேச்சுப் பட்டறை, ஓவியம் வரைதல், தனிநபர் ஆளுமைத் திறன் பயிற்சி, யோகா, தியானம், களப்பயணம், விளையாட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியம் (30) என்பவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு பெய்த மழையினால் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலசுப்ரமணியன் மீது கட்டிட சுவர் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி மதிச்சியம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வாா்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டில் கொசுவலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு உள்ளது.
கோடை கால கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயிலில், நாளை (17.5) முதல் வரும் 23ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும்.
அதேபோல், திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் இன்று (16.5) முதல் வரும் 21ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை அருகே ஆதனூரைச் சேர்ந்தவர் தமிழ். இவரது மகள் வைகைச் செல்வி(24) வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை போலீசுக்கு மறைத்து இன்று சல்வார்பட்டி சுடுகாட்டிற்கு எரிப்பதற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த ஆதனூர் விஏஓ சிவலிங்கம் போலீசில் புகார் செய்தார். அலங்காநல்லூர் போலீசார் பெற்றோர் உட்பட 6 பேரை இன்று கைது செய்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.