India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரைக்கு விமானம் மூலம் வரும் ஏப்.4ல் வருகை தரும் அமித்ஷா, தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கு மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் இராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஏப்.5ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டப்பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14 வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 13, 200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ஆம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவவர்கள் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அண்ணாமலை தற்போது கச்சத்தீவு சம்பந்தமாக ஆர்டிஐ தகவல் உள்ளது எனக் கூறுகிறார். இதற்கு ஆர்டிஐ தகவல் தேவையா என்ற அவர், மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றார். அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான், அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம் என்று ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (02.04.2024) நடிகை ரோகிணி தெற்கு வாசல் மார்க்கெட், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேரை கீரைத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அழகு, விக்னேஸ்வரன், இளம்பரிதி, பாரத், அப்பு, காமேஷ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவையும், மணி, கிளி கார்த்திக், செந்தில் முருகன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் போலீசார் கைது செய்து, அரிவாள் கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா விடுத்துள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்கினை செலுத்தலாம் என அறிவித்துள்ளார். அதன்படி ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.
திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.