India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது 21) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு தான் காதலிப்பதாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார். இதை அந்த பெண்ணின் தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது சதீஷ் அந்த பெண்ணை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று பெண்ணின் தந்தை அளித்த புகாரில் சதீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரையில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 875 மூத்த குடிமக்கள், 324 மாற்றுத் திறனாளிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று முதல் அவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி துவங்கப்பட்டது. இன்று 2வது நாளாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடக்கும் நிலையில், மேலும் நாளையே கடைசிநாள் என்பதால் வாக்களிக்காத முதியோர் தபால் வாக்களிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இளைஞர் ஒருவரிடம் மாணவி போனில் பேசி வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் செயினுடன் திடீரென மாயமானார். இதையடுத்து நகையுடன் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தர தந்தை புகார் அளித்துள்ளார்.
மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
மதுரை மண்டல தரநிர்ணய ஆணைய அறிவியல் ஆய்வு இணை இயக்குநர்கள் அறிவழகன் தலைமையிலான அலுவலர்கள் போலி ஹால்மார்க் நகைகள் குறித்து நேற்று மதுரை, தேனியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தேனி பகவதியம்மன் கோயில் தெருவிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ 880 கிராம் தங்க நகைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போது கோடைகாலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அதிக ஆழம் கொண்ட நீர் நிரம்பியுள்ள பகுதிகளான ஏரிகள், ஆறுகள், குட்டைகள் மற்றும் கிணறுகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி சிறார்களை பெற்றோர் கண்காணிக்க தவற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின் போது பாரம்பரிய முறைப்படி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் முன்பதிவு செய்வது கட்டாயம். என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி அர்விந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் சார்ந்த ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.