India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ், அவரை இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு இதை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் (சி.இ.டி.) சார்பில் 45 நாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய இலவச வேளாண் தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் துவங்குகிறது. பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை, தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் பொறியியல், டிப்ளமோ முடித்தவர்களும் பிளஸ் 2 வில் விவசாயம் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதுரையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில எல்லையிலுள்ள 21 போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகளை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அடுத்த மாதம் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலப்புரம் கிராமத்தில் கீழடியை போல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன.
சூலபுரத்தில் தனியார் தோட்டத்தில், அண்மையில் பள்ளம் தோண்டியபோது பழமையான 1,500 சூதுபவள மணிகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்தது.
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மாலைகள் நேற்று முதல், வரும் 31ம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை பரவையில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருபவர் கோபால். இவர் இன்று அதிகாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கோபால் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரை கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் லோகநாதன் கூறியதாவது, அரசு நடத்திய மணல் குவாரிகள் மூடப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இங்கு, 360 லாரிகள் மணல் விற்பனையை மட்டுமே நம்பி இயங்கி வந்தது. தமிழக அரசு மணல் குவாரிகளை விரைவில் கொண்டு வருவதாக கூறினாலும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, மதுரை மாவட்டத்தில் விற்பனைக்கு மணல் இல்லாததால், தொழில் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம்” என்றார்.
மேலூரை சேர்ந்த ஜெய் கிருஷ்ணன் என்ற மாணவன் 10ம் வகுப்பு தேர்வில் 477 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவராக வெற்றி பெற்றுள்ளார். இவரை வாழ்த்தி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வைத்த பிளக்ஸ் பேனரில், எதிர்பாராத விதமாக பள்ளியின் முதல் மாணவனாக வெற்றி பெற்று அதிர்ச்சியளித்துள்ள ஜெய் கிருஷ்ணன் மேலும் பல அதிர்ச்சிகளை தர வாழ்த்துக்கள் என்ற வாசகம் எழுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த 12ம் தேதி கொலை செய்யப்பட்டு வெள்ளை நிற நைலான் சாக்குப்பையால் முகத்தை மறைத்து கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் R. ராஜா என பச்சை குத்தப்பட்டுள்ள நிலையில் இப்பெண் குறித்து விவரம் அறிந்தவர்கள் 9498101430 என்ற எண்ணிற்கு உடன் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உசிலம்பட்டியில் 9 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, ஆண்டிப்பட்டி, சாத்தியார் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், வாடிப்பட்டி பகுதியில் 3 செ.மீட்டரும் பெரியபட்டியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றிரவு நடைபெற்ற நாடகத்தின் போது, அதைப் பார்ப்பதற்காக இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிரி (61), அவரது மகன் மங்கள பிரபு(30) ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த ராகுல், வினோத், சாஸ்தா, கருப்பு, தினேஷ், ரஞ்சித் சேர்ந்து தாக்கினர். மேலூர் போலீசார் 6 பேரையும் இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.