Madurai

News May 20, 2024

காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொள்ளை?

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று மர்ம நபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த நபரை காவலாளிகள் துரத்தி பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேட்டரிகளை திருடியிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News May 20, 2024

மதுரையில் அஞ்சல்தலை கண்காட்சி!

image

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் இன்று அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது. தபால் தலை நிபுணர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால முதல் தற்போது வரை உள்ள ஆயிரக்கணக்கான வகையிலான அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

News May 20, 2024

குளம்போல் மாறிய ஆட்சியர் அலுவலகம்!

image

மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரம் பலத்த கனமழை பெய்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

News May 20, 2024

மதுரை மக்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை

image

மதுரையில் சில நாட்களாக மழை பெய்வதால், மின்விபத்துகளை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் கழக அறிக்கையில், பொதுமக்கள் தாங்களாக மின்சாதனப் பழுதை கையாளக்கூடாது, அறுந்து கிடக்கும் மின்கம்பி, இழுவைக் கம்பிகளை தொடக்கூடாது, மின்கம்பி தடத்தில் பந்தல், விளம்பரப் பலகை அமைக்கக் கூடாது, வீடுகளில் விபத்துகளை தவிர்க்க ‘ரெசிடியூயல் கரண்ட் டிவைஸ்’ பொருத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

News May 20, 2024

உலக சாதனை புத்தகத்தில் மதுரை பெண்மணி!

image

மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வெண்ணிலா 2019 முதல் ‘ஹைபர் ரியாலிஸ்டிக்’ ஓவியங்கள் வரைந்து வருகிறார். நடிகர்கள், தலைவர்கள் என 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மணமகளின் தாலிக்கு மணமகன் குங்குமம் இடுவது போன்று வரைந்த இவரது படத்தின் ‘குளோஸ் அப்’ ஓவியத்தை ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு ‘ஹிந்து திருமணம்’ என்ற பிரிவில் உலக சாதனைக்கானதாக தேர்வு செய்துள்ளது.

News May 20, 2024

மதுரை: ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தல்

image

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று(மே 19) ஆந்திராவிலிருந்து மதுரைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. விசாரணையில், மதுரையை சேர்ந்த ஓட்டுநர் ஹருன் குமார் உதவியோடு, கன்னியாகுமரியை சேர்ந்த பென்னட், ஜீவா ஆகியோர் கஞ்சா கடத்தியது தெரியவர 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News May 20, 2024

மதுரையில் ஒயிலாட்ட பயிற்சிப் பட்டறை

image

மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மருதுபாண்டியன் வெளியிட்ட செய்தியில், “மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் மே 21 முதல் 23ம் தேதி வரை ஒயிலாட்ட பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இப்பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோா் உணவு, இரு கைக்குட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்” என்றாா். தொடர்புக்கு 8608390844, 9443454446.

News May 20, 2024

மதுரை: காரை அடித்து நொறுக்கி அட்டகாசம்

image

மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(36). கார் ஓட்டுநரான இவர் நேற்று மாலை தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த காரில் அமர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சாம் டேவிட் உள்ளிட்ட 3 பேருடன் மது அருந்தியுள்ளார். இதை வெங்கடேஷ் தட்டி கேட்கவே, 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதுடன் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News May 20, 2024

இருமடங்கான முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் விற்பனை

image

மதுரை ரயில்வே கோட்டத்தில், மொபைல் போன் மூலம், முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளின் விற்பனை, தற்போது, இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த சாதனையை எட்ட காரணமாக இருந்த ரயில்வே அலுவலக ஊழியர்களுக்கு, மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி நேற்று (மே.19) பாராட்டினார்.

News May 19, 2024

மதுரை  மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

தற்போது மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் , மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நீர் நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!