Madurai

News May 20, 2024

திருநங்கையருக்கு அரிய வாய்ப்பு

image

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் திருநங்கையர் ஆவண மையத்தில் திருநங்கையர், திருநம்பிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3 வகையான ஓவிய பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ.450 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9600555097 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News May 20, 2024

கனமழையால் மீனாட்சியம்மன் வீதியுலா ரத்து

image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. 8ம் நாளான இன்று கனமழை பெய்து வருவதால் வழக்கமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் புது மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்குள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சித்திரை வீதி உலாவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

மதுரை எய்ம்ஸ்க்கு தமிழக அரசு அனுமதி

image

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது. கடந்த மே 10 அன்று இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில். தற்போது தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.

News May 20, 2024

மதுரை : நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

மதுரை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

மதுரையில் 52 பேருக்கு பாதிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதித்துள்ளதால் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 20, 2024

சவுக்கு சங்கரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

image

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தேனி மாவட்ட PC பட்டி போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தேனி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

News May 20, 2024

மதுரை: மாநகராட்சிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறப்பு சான்றிதழ் வழங்க தாமதிப்பதாக மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில் சாமுவேல் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் மதுரை மாநகராட்சி எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News May 20, 2024

மதுரை: 11 செ.மீ மழைப்பதிவு

image

மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தல்லாகுளம் பகுதியில் 11 செ.மீட்டரும், திருமங்கலம், மதுரை நகரம் மற்றும் வடக்கு பகுதியில் 5 செ.மீட்டரும், விரகனூர் அணை, கள்ளிக்குடி,சித்தம்பட்டி, இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், கள்ளந்திரியில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 20, 2024

பி.டி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

image

முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆரின் 18ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு இன்று மதுரை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி. தி.மு.க சார்பில் பூமிநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொள்ளை?

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று மர்ம நபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த நபரை காவலாளிகள் துரத்தி பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேட்டரிகளை திருடியிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!