India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேரையூர் தாலுகா அதிகாரிபட்டியை சேர்ந்தவர் இளையராஜா மனைவி மல்லிகா(25). நேற்று மல்லிகா வீட்டில் இருந்தபோது மழை பெய்தது. இதனால் வெளியில் இருந்த பசு மாட்டை கொட்டத்தில் கட்டி விட்டு வீட்டுக்குள் வந்தபோது மர்ம நபர் ஒருவர் மல்லிகாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை பாத்திமா கல்லுாரி வெளிநாட்டு மொழிகள் மையத்தில் பிரெஞ்சு மொழி இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. ஏப்.15 முதல் துவங்கும் இந்த பயிற்சி வகுப்பில் ஜெர்மன் மொழி பேச, எழுத கற்றுத்தரப்படுகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் சேரலாம் எனவும் சர்வதேச அளவில் தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (98421 09298) என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.
மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 150 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பயின்று வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைக்கு நோயாளிகள் இல்லை, ஆபரேஷன் தியேட்டரை பார்வையிட அனுமதியில்லை நூலகத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர யாருக்கும் புத்தகங்கள் இல்லை போன்ற குறைகள் குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் “உன்னை மதுரை எய்ம்ஸில் யார் சேரச் சொன்னது” என்று பதில் சொல்வதால் மாணவர்கள் வகுப்புகளை இன்று புறக்கணித்துள்ளனர் .
மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கழித்து கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது வேகமெடுத்து வருவதாகவும் இதுவரை 13 வகையிலான முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பேரையூரில் 4 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 3 செ.மீட்டரும், மேலூர், மேட்டுப்பட்டி, பெரியபட்டி ஆகிய பகுதியில் 2 செ.மீட்டரும், தல்லாகுளம், கல்லந்திரி, சித்தம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகனூர் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதனிடையே, நேற்று மதுரையில் மழை பெய்தது. இந்தநிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை(35), மனைவி ஜெயலட்சுமி(28).
நேற்று நாகர்கோவில் செல்வதற்காக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவை – நாகர்கோவில் ரயிலில் ஜெயலட்சுமி ஏறியபோது ரயில் கிளம்பியது. இதனால் ரயிலில் சிக்கி அவரது இரு கால்களும் துண்டாகின. காப்பாற்ற முயன்ற சிங்கதுரையின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவ்வழியாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.