Madurai

News April 15, 2024

கோடைகால சிறப்பு வசதி அறிவிப்பு

image

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

பறிமுதல் செய்த 4 கோடி மதிப்புள்ள நகை ஒப்படைப்பு!

image

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த 12ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, நகைகளுக்கான ஆவணங்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறையினர் சரிபார்த்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இன்று விடுக்கப்பட்டன.

News April 15, 2024

மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள் போராட்டம்

image

மதுரை எய்ம்ஸில் சேர்ந்து பயின்று வரும் இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கின்றனர்.

News April 15, 2024

பகுதி நேரமாக கஞ்சா விற்பனை செய்த நிதி நிறுவன மேலாளர் கைது

image

திருப்புவனத்தில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில், மதுரை கொடிக்குளம் அலெக்ஸ் பாண்டியன் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
யுகாதி அன்று விடுமுறை என்பதால் வசூலான பணம் ரூ.7,50,000 தலைமறைவானார். நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து மதுரை கீரைத்துறையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்து, பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை இன்று கைப்பற்றினர்.

News April 15, 2024

 மதுரைக்கு உள்ளுர் விடுமுறை

image

மதுரை மாநகரில் 23.04.2024
(செவ்வாய்க்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளவிருப்பதால் , அன்றைய தினம் மதுரை
மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மே.11 ஆம் தேதி (11.05.2024 சனிக்கிழமை) வேலை தினமாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறவித்துள்ளார்.

News April 15, 2024

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆபத்தா?

image

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்பியுமான கார்த்தி சிதம்பரம் கூறிய ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. “இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டார்கள் என்றால், ராமர் கோயில் டிரஸ்ட் மூலம் மீனாட்சி அம்மன் கோயிலை கைப்பற்றி விடுவார்கள்” என தெரிவித்திருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

News April 15, 2024

சித்திரை திருவிழாவில் நகை பறித்த நால்வர் கைது

image

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் நேற்று ஆவணி மூலவீதி, அம்மன் சன்னதி சந்திப்பில் சுவாமி ஊர்வலத்தின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுகுணா, உமா, செல்வி, ராஜாமணி என்பதும் இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பவுன் நகையை திருடி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News April 15, 2024

மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

image

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.

News April 15, 2024

அண்ணன் உடலை பார்த்து அழுத தங்கை மரணம்

image

உசிலம்பட்டி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான பிச்சை நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பு செய்தி அறிந்து வந்த பிச்சையின் தங்கையான தங்கம்மாள் அவரின் உடலை கட்டி அணைத்து அழுதுள்ளார். அப்போது, அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 15, 2024

மீனாட்சி திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்து

image

மதுரை, பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன், மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏப்.,21 ஆம் தேதி, டிரஸ்ட் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 7:00 மணி முதல் மீனாட்சி திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடைபெறும் எனவும் பக்தர்கள் தேவையான பொருட்கள் தர விரும்பினால் இன்று முதல் ஏப்ரல் 17 வரை பள்ளிக்கு வந்து தரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!