Madurai

News April 16, 2024

சித்திரை திருவிழா: ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

மதுரையில் இன்று 16.04.2024) மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில்
சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்திடவும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News April 16, 2024

சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்

image

மதுரை காந்தி மியூசியத்தில் வரும் ஏப். 26ஆம் தேதி காலை 11:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுயவேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதில் பெருங்காயம், ஸ்குவாஷ், ரோஸ்மில்க், வெங்காய வடகம், பதப்படுத்தப்பட்ட நெல்லிக்கனி சாறு முதலியன தயாரிக்க செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு 98657-91420 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

News April 16, 2024

ஐகோர்ட் எழுப்பிய சரமாரியான கேள்வி!

image

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக விழாவில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? கணவனை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

News April 16, 2024

மதுரையில் காஸ் சிலிண்டர் சப்ளை தட்டுப்பாடு

image

டிரைவர் சம்பளம், இறக்கு கூலி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த 3ஆம் தேதி முதல் கேஸ் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முதல் மதுரை, துாத்துக்குடி பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், ஏழு பிளான்ட்களில் இயங்கி வந்த, 500 லாரிகளை நிறுத்தியதால், மதுரை, துாத்துக்குடி, ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News April 16, 2024

மதுரையில் அதிரடி உத்தரவு

image

மதுரை மாவட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கூடங்கள் 17.04.2024 அன்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12 மணி வரை மற்றும் 21.04.2024 (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மூடப்படும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 16, 2024

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்கு சேகரிப்பு

image

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் ஏந்தி எப்படி வாக்கு சேகரித்த அவர் தனக்கு வாக்களிப்பவர்கள் எந்த எண்ணில் உள்ள சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வாக்கு சேகரித்தார்.

News April 16, 2024

மதுரையில் இன்றே கடைசி

image

மதுரை மக்களவைத் தொகுதிக்கான
தபால் வாக்கு பதிவுக்கு இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா அறிவித்துள்ளார். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், தபால் வாக்கு செலுத்த தவறிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 16, 2024

மீனாட்சி திருக்கல்யாணம் 9370 பேர் விண்ணப்பம்

image

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குப்பட்டது. ரூ.500 டிக்கெட்டில் 6372 பேரும், ரூ.200 டிக்கெட்டில் 2998 பேர் என மொத்தம் 9370 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வழங்கும் பணி துவங்கியது. 

News April 16, 2024

ஸ்தம்பித்த மதுரை! சித்திரை திருவிழா 

image

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இவ்விழாவின் 4-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலையில் சுவாமி, அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, வழிநெடுகிலும் சுவாமி அம்மாளை தரிசிக்க லட்சக்கணக்காண பக்தர்கள் திரண்டதால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்தது.

News April 15, 2024

மதுரை மக்களுக்கு ஆட்சியர் “அலர்ட்”

image

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மதிய வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!