Madurai

News May 24, 2024

கோயில் ஆபரணங்கள் மயமான வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி..

image

காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலின் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போன நிலையில் ஏன் நடைவடிக்கை எடுக்கவில்லை? சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? சம்பவம் நடந்த பின்பு 6 செயல் அலுவலர்கள் பணியாற்றி ஓய்வு பெற்றும் இது வரை ஏன் புகார் அளிக்கவில்லை. 1கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளை மீட்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

News May 23, 2024

அதிமுக மாற்றம்-போட்டுடைத்த ராஜன் செல்லப்பா

image

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’ என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

News May 23, 2024

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

அதிக வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கையை சேர்ந்த நடராஜன் என்பவர், நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிய வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News May 23, 2024

அங்கித் திவாரிக்கு ஜாமின் தளர்வு

image

லஞ்ச வழக்கில் கைதாகி, தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி. அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தளர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி வாரம் ஒரு முறை கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 23, 2024

மதுரை: 5 வயது மகளை கொலை செய்த தாய்

image

மேலூர் உலகநாதபுரத்தைச் சேர்ந்த சமயமுத்து – மலர்ச்செல்வி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமயமுத்து துபாயில் வேலை செய்து வருகிறார். நேற்று அவரது இளைய மகள் மாயமானதாக கூறி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மலர்ச்செல்வி தகாத உறவில் இருப்பதை மகளுக்கு தெரியவந்துள்ளது. இதை மறைக்க மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததுள்ளார். போலீசார் கள்ளக்காதலன், மலர்ச்செல்வியை இன்று கைது செய்தனர்.

News May 23, 2024

திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர்

image

மதுரை அருகே சேடப்பட்டியில், ஒன்றிய செயலாளர் பெருமாள் மகள் திருமண விழாவில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று கலந்து கொண்டார். பின் மணமக்கள் ஜெ.பிரவீன், பெ.மனிஷா ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News May 23, 2024

மதுரையில் இன்று முதல் ஜாலிதான்..!

image

மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி இன்று மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. இன்று முதல் 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் பல்சுவை உணவு அரங்குகளும், பொருட்கள் விற்பனை அரங்குகளும் இடம் பெற உள்ளது.

News May 23, 2024

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

image

யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (23.05.2024) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மே 27ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News May 23, 2024

நஷ்டத்தில் இருந்து மீண்ட ஆவின் நிறுவனம்!

image

மதுரை ஆவின் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் கொள்முதல், டிரான்ஸ்போர்ட், மின்சிக்கனம் , நிர்வாக செலவினங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பால் கொள்முதல் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியதன் இதன் மூலம் ரூ.3.50 கோடி நஷ்டத்தில் இருந்து மீட்டு தற்போது ரூ.4.50 கோடி லாபம் உயர்ந்துள்ளதாக பொதுமேலாளர் சிவகாமி நேற்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

விருது வழங்கிய மதுரை ஆதீனம்…!

image

மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் இரண்டாம் நாளான  நேற்று (22.5.2024) மதுரை ஆதீனம் 293 ஆவது ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் வழக்கறிஞர் சைவத்திரு அ.சிவதாணுவிற்கு வள்ளலார் விருதும் வழக்கறிஞர் அசோகனுக்கு மருதுபாண்டியர் விருதும் வழங்கியருளினார் . இதையடுத்து சிறப்புச் சொற்பொழிவாக சைவத்திரு பவானி தியாகராசன் சைவத்துறை எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

error: Content is protected !!