Madurai

News November 16, 2024

மதுரையில் உச்சம் தொட்ட பூக்களின் விலை

image

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது, இன்று(நவ.16) கார்த்திகை மாதம் தொடங்குவதை முன்னிட்டு மல்லிகைப்பூவின் விலை ரூ.1,500யாக உயர்ந்துள்ளது. முல்லை கிலோ ரூ.800, பிச்சி ரூ.800, சம்பங்கி ரூ.250, செண்டு மல்லி ரூ.200, செவ்வந்தி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.200, மெட்ராஸ் மல்லி ரூ.900, அரளி ரூ.300 என விற்பனையானது. இந்த மாதம் முழுவதும் இதேபோல் விலை அதிகரிக்கும் என தகவல் தெரிவித்தனர்.

News November 16, 2024

மதுரை: ரயில் தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு!

image

மதுரை- திண்டுக்கல் செல்லும் ரெயில்வே பாதையில் சோழவந்தான் பேட்டை ரெயில்வே கேட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்  ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.

News November 16, 2024

மதுரை மாநகரில் எங்கெல்லாம் மின்தடை!

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் இன்று(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

News November 16, 2024

மதுரையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் (நவ.16 &17) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1165 வாக்குச்சாவடி மையங்களில் 2752 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. *பகிரவும்*

News November 15, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், ஊமச்சிகுளம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (நவ.15)  இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

காதலிக்கும்போது முத்தம் கொடுப்பது குற்றமில்லை – ஐகோர்ட்

image

தூத்துக்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்தபோது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி வாலிபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட மதுரை ஐ கோர்ட், இந்த விவகாரம் இந்திய தண்டனை சட்டத்தில் குற்றமாக அமையாது என கருத்து தெரிவித்துள்ளது.

News November 15, 2024

மதுரை – கான்பூர் ரயில் தாமதமாக புறப்படும்

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று (நவ.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை – கான்பூர் சென்ட்ரல் (01928) அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக நாளை (நவ.16) மதியம் 2 மணிக்கு அதாவது 14 மணி 25 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

நடிகை கஸ்தூரியை பிடிக்க டெல்லி விரைந்த மதுரை போலீஸ்

image

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மதுரை திருநகர் காவல் நிலையத்தில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரிய கஸ்தூரியின் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து நேற்று 2 தனிப்படைகள் அவரை பிடிக்க சென்னை சென்றன.தற்போது அவர் டெல்லியில் தஞ்சமடைந்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஒரு தனிப்படை அங்கு விரைந்துள்ளது.

News November 15, 2024

மதுரையில் நடைபெறும் தனுஷின் ‘இட்லி கடை’ பட சூட்டிங் 

image

தமிழகத்தின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜை துவங்கிய நிலையில், இதற்கான படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2024

மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

image

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.