India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெற மதுரை மக்கள் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியிருப்பதாவது, நாளை ஓட்டுப்பதிவு அன்று 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட ஏதுவாக மதுரையில் அரசு நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது அழகர் வேடமணிந்த பக்தர்கள் ஆட்டு தோலினாளான பையில் நறுமண நீரை நிரப்பி தங்க குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பர். இவ்வாறு வேடமணிந்து நறுமண நீரை பீய்ச்சி அடிக்கும் பக்தர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்ய வேண்டும் என்ற மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் மகாவீரர் ஜெயந்தி சேர்த்து மொத்தம் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படும்.தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தை தொட்டது.அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் 55 கோடியே 84 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
மதுரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், பயன்படுத்தும் காகிதங்கள் என ஸ்டேஷனரி பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் செல்லும்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக மதுரை மாவட்டத்தில் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 359 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இம்மையங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு, தேர்தல் நுண் பார்வையாளர்கள், வெப் காஸ்டிங் முறை ஆகியவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை கோட்டத்தில் 316.65 கிமீ தூர திருச்சி முதல் நெல்லை வரை உள்ள ரயில் நிலையங்களில் விபத்தை தடுப்பதற்காக ‘கவச்’ என்ற பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகச் சென்றால் 5 நொடிகள் எச்சரிக்கை மணி ஒலி எழுப்புகிறது. அதற்குப் பிறகும் வேகம் குறையவில்லை என்றால் தானாக பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த செய்கிறது.
தமிழ்ச்சங்கம் வளர்த்த நகரம் நம் மதுரை. அத்தகைய நமது மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் என 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில், மதுரை தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூரும், தேனியில் உசிலை, சோழவந்தானும், விருதுநகரில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.