Madurai

News May 27, 2024

கேரளா அரசுக்கு எதிராக தீர்மானம்

image

மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய நல சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று மூவேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்தும், கேரளா அரசுக்கு மத்திய அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றி வரும் 30ல் மேலூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News May 27, 2024

மதுரை: விமானத்தில் செல்லும் சிறுவன் உடல்

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டியில் உள்ள உருது பள்ளியில், பீகாரை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதில் 13 வயது மாணவன், 9 வயது மாணவனை மே 24ல் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின் 13 வயது மாணவன் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின் 9 வயது மாணவன் உடl இன்று பீகாருக்கு விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது.

News May 27, 2024

சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு ஒத்திவைப்பு

image

சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் கஞ்சா இருந்ததால், கஞ்சா வழக்கு அவர் மீது பாய்ந்தது. கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் மனு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

News May 27, 2024

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் சிறப்பு!

image

மதுரையில் உள்ள முக்கிய கோயில்களில் இந்த வண்டியூர் தெப்பக்குள மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. இங்கு தெப்பத்திருவிழா பிரபலாமன ஒன்றாகும்.

News May 27, 2024

மேலூர் அரசு கலைக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

image

மேலூர் அரசு கலைக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை(மே 28) தொடங்கி நடைபெற உள்ளது. 2024-25ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கு நாளை முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவர் படை, ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கு கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் இன்று(மே 27) தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய முக்கியப் புள்ளி

image

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வீரசக்தி, கமலக்கண்ணன் உள்பட 20க்கும் மேற்பட்டோரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர் கம்பம் தனுஷை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்து(மே 26) மதுரை அழைத்து வந்தனர்.

News May 27, 2024

மதுரை: 6 மாதங்களுக்கு பின் சிக்கிய கொலைக் குற்றவாளிகள்

image

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில், கட்டட வேலை பார்த்து வந்த சுபாஷ் குமார் பஸ்வான் என்ற பீஹார் தொழிலாளியை கொலை செய்து, அலைபேசியை பறித்துச் சென்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக சிக்காமல் தப்பி இருந்த குற்றவாளிகள் மூவர், 6 மாதங்களுக்கு பின் நேற்று(மே 26) போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது சிக்கினர். சங்கையா(20), சந்தோஷ்(20), வல்லரசு(22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 27, 2024

மதுரை: ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ கவியரங்கம்

image

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நேற்று(26.05.2024) மா மதுரைக் கவிஞர் பேரவை சார்பில் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. செயலர் கவிஞர் இரா.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் இரா.வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நூலை வெளியிட்டனர். முனைவர் ஸ்ரீ வித்யா பாரதி த.மு.எ.க.ச செயலர் ஜி.பாலசுப்ரமணியன், பறம்பு நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 26, 2024

மதுரை விமான நிலைய பார்க்கிங் தானியங்கிமயமாகிறது

image

மதுரை, விமான நிலைய இயக்குநர் பி.முத்துக்குமார் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) உத்தரவின்படி, மதுரை விமான நிலையத்தில் ‘தானியங்கி வாகன பார்க்கிங் மேலாண்மை முறை’ மற்றும் புதிய வாகனங்கள் நிறுத்தும் கட்டணம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

மதுரை: வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை

image

மதுரை மாநகராட்சி 80 மற்றும் 81 வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்து புரம், நேதாஜி தெருவில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று நாட்களாக வெளியேறி வீதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மேலும் துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக வேதனையில் தவித்து வருகின்றனர்.

error: Content is protected !!