India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் குழு கல்லுாரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இக்குழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது
மதுரை அரசு மியூசிய வளாகத்தில் கூடல் கலைக்கூடம் சார்பில் வரும் ஜூன் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை இலவச பறை இசை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 30 பேர் பங்கேற்கலாம் என்பதால் முன்பதிவு கட்டாயம் எனவும், ஆர்வம் உள்ளவர்கள் 94434 54446 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லூரியில்(தன்னாட்சி) 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றன. இதில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நாளை(மே 29) காலை 9 மணிக்கு கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் சேர்க்கை குறித்த தகவல்கள் கல்லூரி இணையதளமான www.smgac.org-ல் பதிவேற்றம் செய்யப்படும் என கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் கமிஷன் அடிப்படையில்(3%), முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் ‘விற்பனை உதவியாளர்’ பணிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் ஜூன் 11க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரையை மையமாக கொண்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்களின் புகாரில் அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டம், போடி பகுதியில் செயல்பட்ட ‘நியோ மேக்ஸ்’ நிறுவன முக்கிய நபராக இருந்த பாபு ராமநாதன்(57), முகவராக பணிபுரிந்த அவரது மகன் தனுஷ்(28) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரை, ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). இவர் சென்னையை சேர்ந்த பவித்ரா(24) என்பவரை காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்ய இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும்(மே 26) சிவகங்கையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்தபோது உறங்கான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வந்தது. நேற்று(மே 27) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த Jk அகாடமி அணி சென்னையை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த Jk அகாடமி அணி சென்னை தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க தானியங்கி இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக திண்டுக்கல், பழனி, காரைக்குடி, இராமேஸ்வரம், ராமநாதபுரம், கல்லிடைக்குறிச்சி, மானாமதுரை, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் வைக்க அனுமதி வழங்கி தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கேரளா அரசு முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாளை காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.