Madurai

News April 21, 2024

கள்ளக்குடி: தேர்தல் புறக்கணிப்பு-வெளியான முக்கிய தகவல்

image

கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

image

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் காரில் நின்று கொண்டிருந்த நவீன்குமார் என்பவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் டிபன் பாக்ஸ் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கையில் காயமடைந்த நவீன்குமார் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 21, 2024

பல்கலைக்கழக கண்ட்ரோலரை பதவி நீக்க கோரிக்கை

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் அரசு விதிமுறைகளை மீறியது, தேர்வு எழுதிய மாணவர்களின் 350க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போனது, போன்ற பல்வேறு காரணங்களுக்காக, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். டி. தர்மராஜை பதவி நீக்கக் கோரி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, ‘MKU பணியாளர்கள் சங்கம்’ சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News April 20, 2024

நாளை முதல் 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் நாளை (ஏப். 21) முதல் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

News April 20, 2024

ஜபல்புர் , மதுரை இடையே சிறப்பு ரயில்

image

கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க, மதுரை, ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 20, 2024

மதுரையில் தொடர்ந்து குறைந்து வரும் ஓட்டுப்பதிவு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மதுரையில், கடந்த 3 தேர்தல்களில் பதிவானதைவிட இந்த முறை குறைவாகவே (61.95%) வாக்கு பதிவாகியுள்ளது. 2009 இல் 77.43 %, 2014 இல் 67.74 %, 2019 இல் 66.02 % இருந்த ஓட்டுப்பதிவு இம்முறை 63.92% ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மாநில சராசரி (72%) யை விட குறைவாகும்.

News April 20, 2024

வைகை அணை அருகில் குளித்த இருவர் பலி

image

மதுரை, ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வைகை அணை அருகிலுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை திருவிழாவிற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வரத்து அதிகரித்து சுழலில் சிக்கிய இருவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

News April 20, 2024

காதில் பூ வைத்து வந்த இளைஞர்..!

image

மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த முனீஸ் பாண்டி என்ற இளைஞர் நேற்று வாக்கு செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரது வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை பெண் ஒருவர் செலுத்தி இருந்ததை கண்டு இளைஞர் முனீஸ் பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் இளைஞர் தன் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

News April 19, 2024

மதுரையில் அதிகரித்த வாக்கு சதவீதம்!

image

மதுரை மக்களவை தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்களிக்க காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 7 மணி வரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது. இன்று 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடந்த தேர்தலில் ஒப்பிடுகையில் 1.11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

News April 19, 2024

ஆம்புலன்சில் வந்து வாக்கு செலுத்திய 99 வயது பாட்டி

image

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் லீலா(99). இவர் வேறு பகுதியில் உள்ள மகள் வீட்டில் உள்ளார். தனது தொகுதிக்கு சென்று ஓட்டு போட விரும்பிய இவர், தமது மகள் மூலம் அமைச்சர் பிடிஆர்-க்கு இன்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்ட லீலா பாட்டி, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

error: Content is protected !!