Madurai

News May 30, 2024

ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர்

image

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் அந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இரு முறை ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 30, 2024

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 1 போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெற மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார்.

News May 30, 2024

கஞ்சா கடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை!

image

மதுரை பேரையூர் காளப்பன்பட்டி பகுதியில் கடந்த 2022ல் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பேரையூர் காளப்பன்பட்டியை சேர்ந்த ஆனந்தன், ஆனந்தகுமார் ,ஆந்திராவை சேர்ந்த தேவராஜ்,பாலவெங்கட சிரிபாபு,
ராஜசேகர், ஹரிஸ் ஆகிய 6 பேர் கைதாகினர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 6 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News May 30, 2024

கெட்டுப் போன பால் பாக்கெட் விற்பனை?

image

மதுரை பழங்காநத்தம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லுார் பகுதிகளில் நேற்று சில டெப்போக்களில் நுகர்வோர்கள் அதிகம் வாங்கும் அரை லிட்டர் கோல்டு, டீக்கடை நடத்துவோர் வாங்கும் ‘டீ மேட்’ பாக்கெட்டுகளிலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெட்டுப் போன பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்கியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 30, 2024

மதுரையில் டிடிஎஃப் வாசன் கைது

image

தொடர்ந்து சட்டவிதிகளை மீறி, சிறை வரை சென்று வந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். மதுரையில் தனது நண்பருடன் காரில் பயணிக்கும் போது, வழக்கம்போல போக்குவரத்து விதிமுறைகளை மீறினார். போன் பேசிக்கொண்டே காரை ஓட்டி, அதை வீடியோவும் எடுத்து யூடியூபில் வெளியிட்டது என்று, விதிமுறைகளை மீறியதால், மதுரை அண்ணாநகர் போலீசார் வாசனை காருடன் கைது செய்தனர்.

News May 29, 2024

கோயில் நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளுக்கு தடை

image

தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி, ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், எனவே அவரது செயல்பாடுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ” இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய” ஆணையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News May 29, 2024

மதுரை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் , வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி ஆகிய 11 வட்டங்களில் ஜுன்.12 ஆம் தேதி தொடங்கி ஜுன் 25 ஆம் தேதி வரை பசலி 1433கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டுள்ளார்.

News May 29, 2024

மதுரை புனித மேரி தேவாலயம் சிறப்புகள்1

image

மதுரையில் அமைந்துள்ள வியக்க வைக்கும் தேவாலயமாக இருந்து வருகிறது புனித மேரி தேவாலயம். தந்தை கார்னியர் எனப்படும் பாதிரியாரால் சின்ன தேவாலயமாக 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. 1916இல் இத்தேவாலயம் விசாலமாக விரிவாக்கப்பட்டது. இந்த தேவாலயம், வியாகுல மாதா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்து ரோமாபுரி பாணி கட்டடக் கலையில் அமையப்பெற்றுள்ள இரண்டு மணி கோபுரங்கள் உள்ளன.

News May 29, 2024

காவல் ஆணையரிடம் புகார் அளித்த மக்கள்

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்த நிலையில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆணையர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News May 29, 2024

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் மே.31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர் வேல்முருகன் கூறினார்.

error: Content is protected !!