India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி.கல்லுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நேற்று சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அழகுராஜா தடுத்துள்ளார். அப்போது கே.சத்திரப்பட்டியை சேர்ந்த அழகுராஜா, தங்கபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து காவலர் அழகுராஜாவை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். காவலர் அளித்த புகாரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை புதுார் தொழிற்பேட்டை MSME தொழில்நுட்ப அலுவலகத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி, பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே 2 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் இதில் கலந்துகொள்ளலாம். விரும்புவோர் 0452 – 2568313 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று நடந்த கள்ளழகர் எழுந்தருளும் விழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் 60 குழுக்களாக நடத்திய சோதனையில் 82 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்களிடமிருந்து 26 கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு 69 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடகொரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சூரத் தொகுதியில் காங். வேட்பாளர் மனுவை நிராகரித்து விட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவித்துள்ளனர். சூரத்தில் பாஜக வெற்றியை சர்வாதிகார ஆட்சி நடக்கும் வடகொரியாவுடன் ஒப்பிடுவதாக பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கட்றாபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் சித்திரை திருவிழாவில் பெண்களிடம் நகைகளை கொள்ளை அடிக்க வேண்டும் என ஹிந்தியில் பேசி கொண்டிருந்ததை விடுதி மேலாளர் முரளி கவனித்து, போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் 6 பெண்கள் உட்பட 8 பேரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து திருடுவதற்கு தேவையான சிறிய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களும் நடைபெறும். எனவே பக்தர்கள் ஒவ்வொருவரும் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை ரயில்வே போலீசாருக்கு, பைகாரா பகுதியை சேர்ந்த விஏஓ பெயரில் கடிதம் வந்தது. அதில், பைகாரா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், கடித முகவரியை தொடர்பு கொண்ட போது அதில் பேசியவர், தான் விஏஓ ஆக இருப்பதாகவும், முன்விரோதத்தில் தன்னுடைய பெயரில், யாரோ கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 27 இல் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும்” தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் பி. சுப்பிரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் ஆழ்வார்புரம் பகுதியில் இரு இளைஞர்கள் மீது 5பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருப்பாச்சியை சேர்ந்த 26 வயது வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு 8வது பிளாட்பார்ம் அருகே அடையாளம் தெரியாத யாசகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக அந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.