India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு , 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.
https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் அறிவித்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4-க்கான எழுத்துத் தோ்வு வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 1,07,724 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 393 மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் தண்ணீர், மின்சாரம், விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் சிக்கியவர்களை வீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றியவருக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது. விருதுபெற தகுதியுள்ளவர்கள் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம்’ என குறிப்பிட்டு விண்ணப்பத்தை ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு அனுப்பலாம் என அறிவிப்பு
மதுரை அனுப்பானடி பாபு நகரை சேர்ந்தவர் திலகவதி(62). இவர் நேற்று காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி திலகவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் வருகிற ஜூன் 9ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6244 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 4 ” தேர்வு நடைபெற உள்ளது.மதுரையில் குரூப் 4 தேர்வு நடைபெறும் நாளில், தேர்வில் பங்கேற்போர் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு, மதுரை ஆட்சியர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை நகைக்கடை பஜாரில் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து வரும் 2ம் தேதி மரக்கன்றுகள் நடவு செய்யும் திருவிழா நடத்த உள்ளனர். இந்த விழாவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாரை தலைமையேற்று தொடக்கி வைக்க இன்று நேரில் அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் மு. ரா.பாரதி, செந்தூர் பாண்டியன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் தி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 74-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மதுரை மேற்குக் கோபுரத் தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் புத்தக விற்பனைக் கூடத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
உசிலம்பட்டி, விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் ரவிராஜன் மகள் சசிகா(10). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மே 30) இச்சிறுமி துப்பட்டாவை, சாய்த்து வைத்திருந்த கட்டிலில் கட்டி விளையாடிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கழுத்தில் துப்பட்டா சுற்றி இறுக்கவே, மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனை கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 52 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 41 கிலோ கருப்பை கட்டியை மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு, 40 செ.மீ.,க்கு 32 செ.மீ., அளவுள்ள பெரிய கருப்பை கட்டி இருந்ததால் கவனமாக மதிப்பீடு செய்து அறுவை சிகிச்சை செய்ததாகவும், நோயாளிக்கு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது என்றனர்.
மதுரையில் கடந்த வாரம் கனமழை பெய்து மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாநகர் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
Sorry, no posts matched your criteria.