India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணி துவங்கப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரும் பல்வேறு அரசியல் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். செல்போன் கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த பொருளும் உள்ளே கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் மொத்தம் 62.04 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு வெங்கடேசனும், அதிமுக சார்பில் டாக்டர் P சரவணனும், பாஜக சார்பில் ராம சீனிவாசனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2019இல் மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்ட வெங்கடேசன் 13.78% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ் சத்யன் 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணியில் சு.வெங்கடேசனும், அதிமுக சார்பில் பி.சரவணனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். ஏற்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கங்களையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். சாதித்த மாணவ, மாணவியரை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார்.
மதுரையில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை எனவும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளதால் முடிவுகளை நாளை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெபாசிட் கிடைப்பதே பெரிய விஷயம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பு என்பது கருத்து திணிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(ஜூன் 4) காலை 7 மணிக்கு திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மேற்பார்வையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
மதுரையின் மற்றொரு பெருமையாக மதுரை கலைஞர் நூலகம் திகழ்கிறது. திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஆசியாவிலேயே பிரமாண்டமான இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இங்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.