India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இன்று முதல் மே.1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழும்பூர் – நாகர்கோவில் இடையே செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வண்டி எண் (06067) எழும்பூர்- நாகர்கோவில் வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் மே.2ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எழும்பூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06057) சேவையும், மே.3ஆம் தேதி முதல் ஜூன்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தலைமையில் இன்று பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
மதுரை நகரம் மற்றும் விமானநிலையம் முறையே நேற்று (ஏப்.26) 102.56 மற்றும் 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மதுரை மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மதுரை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்பு பூத் சிலிப் விநியோகத்தை அரசியல் கட்சிகள் செய்தன. அதில் எல்லோருக்கும் பூத் சிலிப் கிடைத்தது. தற்போது அரசு ஊழியர்கள் மட்டுமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த பணி சரிவர நடைபெறவில்லை. 55% முதல் 60% வரை மட்டுமே வழங்கப்பட்டது. எனவே பூத் சிலிப் விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தடநாச்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளனர். அதை மற்றொரு தரப்பினர் தடுத்தபோது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், பாட்டில் கம்பு ஆகியவற்றால் மாறி மாறிதாக்கி கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அனைத்து மத்திய சிறைகளிலும் வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தொடுதிரை வசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை கைதிகளின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகளில் உள்ள இந்த தொடுதிரை இயந்திரம், சிறை கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்று கூறி பாராட்டியது.
சிறுபான்மையினா் மீது அவதூறு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் சந்தைப் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் விஜயராஜன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த அருள்முருகன் (29) மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது அங்கு வந்த மர்ம கும்பல் அருள்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு கையை தனியாக துண்டித்தனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அருள் முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலூர் அருகே கீழவளவில் கடந்த ஏப்.21-ல் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு நடந்தது. இதில் நவீன்குமார் ஆட்டோ டிரைவர் கண்ணன் காயமடைந்தனர். இது தொடர்பாக கீழவளவு போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த வெள்ளையதேவன் (24) இன்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை மே 10-ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க நீதிபதி கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.