Madurai

News April 28, 2024

இலவச யோகா பயிற்சி முகாம்

image

மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் யோகா வகுப்புகள் நடைபெறவுள்ளது. மே 1 முதல் மதுரை தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7 மணி வரையிலும், குழந்தைகள், பெண்களுக்கு தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரையிலும் வகுப்பு நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 94875-37339 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News April 28, 2024

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

image

மதுரை, பேரையூர் அருகே அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் புதுமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் அத்திப்பட்டி, வடகரை, மங்கல்ரேவு
மற்றும் சின்னக்கட்டளை ஆகிய 4 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முதல் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடுவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்திரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மூடப்பட்டது. 

News April 28, 2024

ஒரே நாளில் 72 ஆயிரம் பீர் பாட்டில் விற்பனை

image

மதுரையில் டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம், ஓட்டல் பார்கள் என மொத்தம் 300 மது விற்பனை கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் பீர் விற்பனை சராசரியாக 40,000 பீர் பாட்டில்கள் விற்பனையாகி வந்துள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்து வருவதால் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 72,000 பீர் பாட்டில் விற்பனையாகி வருவதாக மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 28, 2024

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமுதாய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய இளைஞர்கள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இந்த விருதுக்குத் தலா 3 ஆண்கள், 3 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் தகுதியானவர்கள் இணையதளம் மூலம் மே 1-ஆம் தேதி முதல் மே 15- ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2024

தென்னிந்திய சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்

image

தென்னிந்திய சுற்றுலா திட்டத்தின் கீழ் ஐஆர்சிடிசி மதுரை டூர் பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது . மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இடங்கள் இந்த சுற்றுலாத் தொகுப்பில் அடங்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இது தவிர 9001094705 மற்றும் 9001040613 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.

News April 28, 2024

சித்திரை பொருட்காட்சி மக்கள் ஏமாற்றம்

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமுக்கத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சி மக்களவை தேர்தலை காரணம் காட்டி இதுவரை துவங்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே  அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே.10 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என  தகவல் வெளியாகியுள்ளது.

News April 28, 2024

40 லட்சம் பேருக்கு தரிசனம் தந்த கள்ளழகர்

image

மதுரை அழகர்மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பட்ட கள்ளழகர் ஏப்.23 இல் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து 5 நாட்களாக மதுரை மக்களின் மனங்களை குளிர்வித்த கள்ளழகர் நேற்று அழகர் மலையை வந்தடைந்தார். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 28, 2024

கொலை வழக்கில் 3 பேர் கைது

image

மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ராமர் மகன் அருள்முருகன் (28) நேற்று முன்தினம் விளாங்குடி கணபதி நகரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்த காமராஜர் சாலையை சேர்ந்த காளி ஆனந்த், நாகார்ஜூன், அருண்குமார் ஆகிய 3 பேரை நேற்று இரவு கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News April 28, 2024

2 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம்

image

மதுரை யா. ஒத்தக்கடையைச் சோ்ந்த 18 வயது பூா்த்தி அடையாத சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், அவருக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிப்புக்குள்ளான குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

உங்கள் மதவெறி அரசியலை கொண்டு வராதீர்கள்

image

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் மதுரை சித்திரை திருவிழா வீடியோவை பகிர்ந்து, “மதுரையில் இந்துத்துவாவின் பலம் வெளிப்படுகிறது” என்று கூறி இருந்தார். இதற்கு அமைச்சர் பிடிஆர், ” உங்கள் மாற்றுப் பிரபஞ்சத்தில் கூட அது உண்மையாக இருக்காது. இது மீனாட்சி தேவியின் சக்தி, உங்கள் மதவெறி வழிபாட்டில் பயன்படுத்த தெய்வீகமான ஒன்றை அபகரிக்க வீண் முயற்சியில் ஈடுபடாதீர்கள் ” என பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!