India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மாணவி கோகிலா மதுரை சோலையழகுபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்துக்கொண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தையை இழந்தும், சுயநினைவை இழந்த தாயை பராமரித்து வந்த மாணவி கோகிலா 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தும் 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தாய்க்கு தாயாக இருந்து ஏழ்மை நிலையிலும் சாதித்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று(மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, பேரையூர் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மத்திய சிறையில் +2 தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில்
536 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்று அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண்குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் பாராட்டி, வாழ்த்தினர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் தேர்ச்சி 95.19% பதிவாகியுள்ளது. மாணவர்கள் -92.82 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.38 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ள மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா அறிவுறுத்தியுள்ளார்.
கேரளா மாநிலம் புதுவேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(47). இவர் திருச்சி துவாக்குடியில் இருந்து காற்றாலை உபகரணங்களை லாரியில் ஏற்றிக் கொண்டு இன்று மேலூர் நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டியில் உள்ள சாலையோர ஓய்விடத்தில் லாரியை நிறுத்தி விட்டு படுத்தார். அப்போது வெயிலின் தாக்கத்தால் வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மேலூர் அரசு கலை கல்லூரியில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (மே.5) மதியம் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மதுரை நாராயணபுரம் பகுதியில் உள்ள எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50-வயதான வழக்கறிஞர் சந்தானம் என்பவர் நீட் தேர்வை எழுத வந்தார். முதல் முறையாக தேர்வு எழுத வந்துள்ளதாக தெரிவித்த அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத செல்பவர்களை முழு சோதனை செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நீட் நுழைவு தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 9312 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் மாணவ மாணவியர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளனர். மாணவ மாணவியர் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு 2 மணி முதல் துவங்கி மாலை 5.20 மணியுடன் நிறைவு பெருகிறது.
Sorry, no posts matched your criteria.