India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, ஒத்தக்கடை பகுதியில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது. அப்போது, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
மதுரையில் இருந்து இன்று காலை ஹைதராபாத் கிளம்பிய விமானத்தில் பயணிகளில் ஒருவரான சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் வந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் விமான பயணத்தை ரத்து செய்தனர். 20 நிமிட தாமதத்திற்கு பின் விமானம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.
மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ்-2 அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றமாணவிகள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-2679940,97109 38012 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 13 முதல் 24 வரை நடக்கும் பயிற்சியில் சுத்த தங்கம் கணக்கிடும் முறை, உலோகவியல், கடன் தொகை வழங்கும் முறை, தங்கம் தரம் பார்த்தல் செய்முறை விளக்கம் அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் 86956 46417 எண்ணில் முன்பதிவு செய்யலாம்
பெண் காவல்துறை அதிகாரிகளை தப்பாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர்.
சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டு, தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அந்த கஞ்சா வழக்கிற்காக, இன்று, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகிறார்.
மதுரை தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இன்று முதல் (மே 8) முதல் 15 வரை பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா பயிற்சியுடன் யோகாவின் பலன்கள் குறித்த இலவச ஆலோசனைகள், இயற்கையான வாழ்வியல் முறை, தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில் மதுரை 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்தாண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி சரிவடைந்து மாவட்ட ‘ரேங்க்’கிலும் பின்தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டு, இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி காட்டிய பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆழ்வார்புரத்தில், பள்ளி மாணவர்களுக்காக நடக்கும், கோடை கால பயிற்சி முகாமில்,
சமூக ஆர்வலர் அசோக் குமார், விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு வழங்கிடும் விதமாக, நுங்கு பற்றியும், அதில் இருக்கும் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை பற்றி விளக்கினார்.
பின்னர், நுங்கு சாப்பிட்ட பிறகு அதில் வண்டி செய்து குழந்தைகளுக்கு விளையாடி காட்டினார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் உதவி பேராசிரியர் நிர்மலா தேவியை கடந்த வாரம் குற்றவாளியாக அறிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தண்டனையை ரத்து செய்ய கோரியும் அதுவரை இடைக்காலமாக ஜாமின் வழங்க கோரியும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Sorry, no posts matched your criteria.