India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகரில் 118 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியில் கான்ஸ்டபிளாக சேர்ந்தவர்கள் எவ்வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தால் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்படும். இதன்படி 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை நகரில் பணியாற்றும் 118 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் வேளாண்துறை சார்பில் 13 வட்டாரங்களில் உள்ள 10 ஆயிரத்து 100 விவசாயிகளின் வயலில் இலவச மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண்ணின் தன்மைக்கேற்ற பயிரைத் தேர்ந்தெடுத்து மகசூல் பெறுவதற்கும் உரச்செலவை குறைப்பதற்கும் மண் பரிசோதனை அவசியம் என்பதால் இந்த பரிசோதனை செய்து அதற்கேற்ப சாகுபடியை பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
கோவையில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் வயது மற்றும் போட்டி பிரிவுகளில் 11 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். இதையடுத்து பரவையில் மாணவ மாணவியருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
மதுரை பாண்டி கோயில், குறிஞ்சி வனம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், நேற்று போலீசாரைப் பார்த்தவுடன் தப்பியோட முயன்றனர்.
அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், உலகநேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (28) என்பதும், வழிப்பறியில் ஈடுபட அனைவரும் ஆயுதங்களுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மனோகரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்
மதுரை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தினமும் 100 ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் ” விலையில்லா விருந்தகம் ” திறப்பு விழா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. தளபதி விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையேற்று திறந்து வைக்கிறார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி(சி. இ. ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தவும், தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை 100% மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வானதி நேற்று தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 10, 12, 13 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநா் சண்முகசுந்தா் நேற்று(ஜூன் 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குரூப்-1 90 காலிப் பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் TNPSC குரூப்-1 தோ்வுக்கான விண்ணப்ப படிவம், ஆதாா் அட்டை, 2 கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.
“கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றிதான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு ‘X’ தளத்தில் பதில் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.