India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் வருகிற 14ம் தேதி ரஷ்ய கல்விக் கண்காட்சி தனியார் விடுதியில் நடைபெறும் என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கண்காட்சியில், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், கல்விக் கட்டணம், தங்குமிட வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘ நீட்’ தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே மதுரை வழியாக செல்லும் புதிய சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
” தாம்பரம்- திருவனந்தபுரம் கொச்சுவேளி – தாம்பரம் சிறப்பு ரயில் ” வியாழன் மற்றும் சனிக்கிழமை சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பி, விழுப்புரம், திருச்சி,மதுரை, விருதுநகர் வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும். இன்று 11/05/24 காலை முதல், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
இன்று (மே 11), உலக அருங்காட்சியக தினம் அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரையில், காந்தி மியூசியம் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று முதல் மே 16 வரை சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு கிராமிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில், வயது வரம்பின்றி ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என்று, அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதில் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டு, பிறகு வந்தது. இந்நிலையில், டிவிஎஸ் நகர், மீனாட்சி ரோடு பகுதியில், இன்று இரவு நடந்து சென்ற கணவன், மனைவி அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்தனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில், மதுரை மாவட்ட காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், குடிநீர் விநியோகம் மற்றும் வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை உசிலம்பட்டி அருகே வசிக்கும் கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட முகம்மது தஸ்தகீர் என்பவரை சோதனையிட்டனர். துபாயில் இருந்து வந்த முகம்மது தஸ்தகீர், பேஸ்ட் வடிவில் 790 கிராம் தங்கத்தை ரூ.56 லட்சம் மதிப்பு) மறைத்து கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது, தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.