India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர், அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி எனவும், எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் என புகழாரம் சூட்டினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாதுறைகளையும் கைப்பற்றுவார்கள், அதேபோல் சினிமாத்துறையையும் கைப்பற்றியுள்ளதாக விமர்சித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நாளை முதல் வரும் 22ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தையொட்டி நாளை முதல் 25-ந்தேதி வரை கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகையாற்றில் சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வைகை ஆற்றின் இருகரையும் தொட்டபடி சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆபத்தான நிலையில் வாகனங்கள் செல்கின்றன.
வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று மதுரை வைகையாற்றை வந்தடைந்தது. இதனால் சிம்மக்கல் ஏ.வி. பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனுடைய ஆற்றில் இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் கூடாது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வெற்றி, வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சியினர் கடந்த மே 17ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருப்பரங்குன்றம் முதல் திருநகர் வரை பைக்கில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் பாஜகவினர் 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோ.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் ஜூன்.6 ஆம் தேதி வரை நடைபெறுவதாக தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் ஸ்ரீதேவி அறிவித்துள்ளார். www.skilltraining.tn.gov.in குறித்த மேலும் விவரங்கள் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரையினை நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் 6 செ.மீட்டரும், மேட்டுப்பட்டி,கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 4 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, பெரியபட்டி, திருமங்கலம்,கல்லிக்குடி, சித்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மதுரை மாவட்ட பள்ளிகளின் வாகனங்கள் நிலை குறித்து, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 280 பள்ளிகளைச் சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் வசதி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனிடையே தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டு செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைவாசிகள் 51 பேர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 99% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.