Madurai

News June 11, 2024

நாளை முதல் ஆதார் திருத்த சிறப்பு முகாம்!

image

மதுரை மாநகராட்சி 78 வது வார்டு கோவலன் நகரில் 78 வது வார்டு மற்றும் ஆதார் சேவா கேந்திரா இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் நாளை 12.06.2024 முதல் 16.06.2024 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே புதிய ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம், கைபேசி எண் திருத்தம் ஆகிய சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

12ம் தேதி முதல் 2 வாரம் ஜமாபந்தி முகாம்

image

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் வரும் 12.06.2024 முதல் 25.06.2024 வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் முகாம் நடைபெறுகிறது. எனவே முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் அளித்து பயனடைய அறிவுறுத்தல்.

News June 11, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை-பாஜக புகார்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாஜக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மாநகர பாஜக சார்பில் அளித்துள்ள மனுவில், இந்த அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர்,ஆனால் உரிய நாற்காலி வசதி கூட இல்லாமல் தரையில் அமர வைக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது

News June 11, 2024

ஜவுளி பூங்கா அமைக்க அழைப்பு..!

image

மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -625 014 என்ற முகவரியில் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது  96595 32005 கைப்பேசி எண்களில் அழைக்கலாம்

News June 11, 2024

மதுரை ஆதீனத்தில் தேவாரம் பயிற்சி வகுப்பு

image

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ளது ஆதினம் மடம்.
இங்கு 293வது பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ” வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை நான்கு மணிக்கு
” தேவாரப் பயிற்சி வகுப்பு ” நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். எனவே விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News June 10, 2024

பிரேமலதா பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது

image

மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினர். வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு சென்னையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது என்றார்.

News June 10, 2024

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க முகாம்

image

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு மதுரை மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஜூன்.06 அன்று காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

அதிகாரிகளுக்கு மேயர் அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று வழங்கினர். மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் இலவச பாடநூல் மற்றும் சீருடை ஆகியவற்றை எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்கிட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

News June 10, 2024

தமிழகத்திற்கு மோடி நல்லது செய்வாரா-செல்லூர் ராஜூ

image

புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது “எக்ஸ்” தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து
தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்களா ? என பார்ப்போம் என்று பதிவு பேசுபொருளாகியுள்ளது.

News June 10, 2024

மதுரை: அரசு மருத்துவக்குழு சாதனை

image

மதுரை மல்லப்புரத்தைச் சேர்ந்தவர் சேகர் (68). மகாதமனி இரத்தக்குழாய் வீக்கமடைந்து வெடிக்கும் தருவாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி பைபாஸ் இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான ஸ்டென்ட் சிகிச்சை மூன்றையும், 8 மணிநேரம் வெற்றிகரமாக செய்து முதியவரின் உயிரை கைப்பற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 

error: Content is protected !!