Madurai

News May 15, 2024

விஷத்தை கக்குகிறார் அமைச்சர் ரகுபதி –  ஆவேசம்

image

மதுரையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ” 2 கோடி தொண்டர்களுடன் வலிமையுள்ள இயக்கமாக அதிமுகவை பொதுச்செயலாளர் பழனிசாமி வழிநடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல், தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அதிமுகவில் இருந்து தாய்ப்பாலை குடித்துவிட்டு, இப்போது, திமுகவிற்கு சென்று எதிராக விஷத்தை கக்குகிறார் ரகுபதி” என்று ஆவேசமாக பேசினார்.

News May 14, 2024

விரைவில் டைடல் பார்க் பணி துவக்கம்!

image

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் அமையவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த பின் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான மாதிரி வரைபடத்தை டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் டைடல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது.

News May 14, 2024

மதுரை அருகே வெளுத்து வாங்கிய மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது பேரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது . இதனால் அப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.

News May 14, 2024

கட்டுமான பணிகள் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

image

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் “தொழிலக பாதுகாப்பு இயக்ககம் ” தற்போது உத்தரவிட்டுள்ளது.

News May 14, 2024

கட்டுமான பணிகள், தமிழக அரசு அதிரடி உத்தரவு

image

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று
அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் “தொழிலக பாதுகாப்பு இயக்ககம் ” தற்போது உத்தரவிட்டுள்ளது.

News May 14, 2024

மதுரை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 21ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் 21 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.60% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.51 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.77 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: மதுரையில் 92.07 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் 87.59 % பேரும், மாணவியர் 96.26 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.07 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

மதுரை சரக டிஐஜி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

image

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் (டிஐஜி) ரம்யாபாரதி , மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டிஐஜி ரம்யாபாரதி,சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் பொறுப்பேற்றார்.
இவரைவிமானப் பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

News May 14, 2024

ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

image

மதுரை மாவட்டத்தில் மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்துக்கான சா்க்கரை, அரிசி மட்டுமே வந்துள்ளதாகவும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படாததால், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

News May 14, 2024

மதுரையில் ஆட்டோ பேட்டரி திருடியவர் கைது

image

மதுரை, ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முகமது அலி ஜின்னா(31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில், லோன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
நேற்று இவர் தனது வீட்டு முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது, அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த இப்ராஹிம் (42) என்பவர் திருடிச் சென்றார். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிமை கைது செய்தனர்.

error: Content is protected !!