India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வரும் 15ம் தேதி குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட குறைகள் தொடர்பாக மனுக்களை அலுவலரிடம் வழங்கி தீர்வு பெற ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்
மதுரையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சு.வெங்கடேசனுக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்துள்ளதாக சரவணன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அது குறித்து கட்சி தலைமைக்கு சரவணன் தகவல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்களது கருத்து என்ன..?
நெல்லையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று (ஜூன் 12) அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தபால் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜூன் 12) தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “மதுரை மக்களவைத் தேர்தலின் வெற்றிச் சான்றிதழை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வதற்காக தற்போது நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்திற்கு வந்துள்ளேன் என்றும், பிரதமர் மோடியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மதுரைத் தொகுதி வாக்காளப் பெருமக்களை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகளில், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் குறித்த காரண அறிக்கையை “உண்மை கண்டறியும் குழு” மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், “பட்டாசு ஆலையை மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விடுவது, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்வது, பழமையான பட்டாசு கொட்டகை, ஆபத்தான கெமிக்கலை பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கையாள்வது” போன்றவை தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ஹரிஷ் குமார் 17. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி பயில்வதற்காக தயாராகி வந்த ஹரிஷ் குமார் நேற்று வீட்டின் அருகே உள்ள வேலி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த தந்தை ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
மதுரை காந்தி மியூசிய புனரமைப்புக்கு ஏற்கனவே ரூ.6 கோடி வழங்கிய நிலையில் ரோடு, பிற பணிகளுக்காக ரூ.4 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், ரோடு, பாதாள சாக்கடை வசதி, குடிநீர், கழிப்பறை சீரமைப்புக்காக தற்போது கூடுதலாக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. புனரமைப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற உள்ளது.
மதுரை மண்டலத்தின் வருமான வரி வசூல் 1% மட்டுமே உயர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை (நாகர்கோவில் கிளை) சார்பில் நடத்தப்பட்ட ” வரி செலுத்துவோர் அவுட்ரீச் ” நிகழ்ச்சியில் பேசிய மதுரை முதன்மை வருமான வரி ஆணையர் டி.வசந்தன் இதைத் தெரிவித்தார். மேலும் வரி வசூலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதுரை, சந்தைப்பேட்டையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறாா்கள் இருக்கின்றனா். இந்நிலையில், இங்கு இரண்டு குரூப் சிறாா்களுக்கிடையே , திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் சிசிடிவி கேமராக்கள், டிவி, ஃபேன், மேஜை, நாற்காலிகள், மின் விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கப்பட்டது.
தற்போது, அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.