India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையின் காவல் தெய்வமாக வண்டியூர் மாரியம்மன் விளங்குகிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷேஷ நிகழ்ச்சி நடத்தினாலும், மாரியம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகே நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரியது எனும் பெயரை பெற்றுள்ளது. தீராத வியாதி, குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை நீங்க இங்கு வழிபட்டால் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். Share.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய (ஏப்.10) விலைநிலவரம்: தக்காளி ரூ.10 முதல் ரூ.20, பீட்ரூட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.60, கேரட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, கத்திரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ. 15 முதல் ரூ.30 க்கும் விற்பனையாகிறது.
மதுரை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
மதுரை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் 9 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.10) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட நாட்களையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் கன்னியாகுமரி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கன்னியாகுமரி சென்று சேரும். இது 10, 17 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் அதிக குப்பை சேர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தீர்வு காண அதிக குப்பை சேரும் இடங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தில் (டி.ஏ.என். ஐ.ஐ) அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து விரைவில் மாநகராட்சியில் 80 இடங்களில் ஏ.ஐ கேமரா பொறுத்தப்பட உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL
மதுரை மாவட்ட ஆட்சியர் 0452-2531110, மாவட்ட வருவாய் அலுவலர் 0452-2532106,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் 0452-2533272, மாவட்ட வழங்கல் அலுவலா் 0452-2546125,
பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் 0452-2529054,
ஆதி திராவிடா் (ம) பழங்குடியினா் நல அலுவலா் 0452-2536070,
உதவி இயக்குநா் (நில அளவை) 0452-2525099. மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும் .
Sorry, no posts matched your criteria.